Type Here to Get Search Results !

KONKAN NAVY EXERCISE / கொங்கன் கடற்படை பயிற்சி

 

TAMIL
  • வங்கக் கடலில் இந்திய, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் போர்ப்பயிற்சியை 2 நாட்களுக்கு (ஜூலை 22, 23)  நடத்தவுள்ளன. இந்தக் கூட்டுப்பயிற்சியில் பிரிட்டனின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஹெச் எம்எஸ் குயின் எலிசபெத் பங்கேற்கவுள்ளது.
  • இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் சீனக் கடலை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற் கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 
  • கடற்படையின் வலிமையை வெளிக்காட்டும் நோக்கில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக இந்தியா - பிரிட்டன் கடற்படைகள் இடையேயான கூட்டுப்பயிற்சி இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
  • இந்த கூட்டுபோர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, பிரிட்டனின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பல் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.
  • அப்போர்க்கப்பலில் எஃப்35பி போர் விமானங்களையும், 14 ஹெலிகாப்டர்களையும் நிறுத்த முடியும். அக்கப்பலுடன் பிரிட்டன் கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன. 
  • கூட்டுப் பயிற்சியின்போது, பல்வேறு வகையான பயிற்சிகளை இந்தியா-பிரிட்டன் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொள்ள வுள்ளனர்.
  • ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பலின் மூலமாக மேற்கொள்ளப்படும் கூட்டுப்பயிற்சியானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும். 
  • இது பாதுகாப்பு விவகாரத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்தியக் கடற்படையுடனான கூட்டுப்பயிற்சிக்குப் பிறகு ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போர்க்கப்பல் தென்சீனக் கடல் பகுதிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்வாரில் பயிற்சி
  • இதைத் தொடர்ந்து கர்நாடகாவிலுள்ள கார்வார் துறைமுகத்தில் அக்டோபர் 21 முதல் 23 வரை இந்திய, பிரிட்டன் கடற்படையினர் போர்ப்பயிற்சியை நடத்தவுள்ளனர். 
  • அதைத் தொடர்ந்து கோவா கடற்கரைப் பகுதியில் அக்டோபர் 24 முதல் 27-ம் தேதி வரை கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் போர் பயிற்சியின்போது இந்தியாவின் ராஜ்புத் கப்பல் உள்ளிட்ட 12 போர்க்கப்பல்கள், 30க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்கவுள்ளன.
ENGLISH
  • The Indian and British navies will hold a joint military exercise in the Bay of Bengal for the first 2 days today (July 22, 23). The HMS Queen Elizabeth, Britain's largest warship, will take part in the exercise.
  • China's dominance in the Indo-Pacific region is growing. China, in particular, is celebrating its own South China Sea. Efforts are being made by the Western powers to prevent it.
  • Britain is conducting separate joint exercises with about 40 countries in the Indo-Pacific region to showcase its naval strength. As part of this, a joint exercise between the Indo-British navies will be held in the Indian Ocean for 2 days.
  • The HMS Queen Elizabeth, Britain's largest warship, has arrived in India to take part in the exercise. The warship can park F35B fighter jets and 14 helicopters. Six ships of the British Navy and one submarine have arrived in India with the ship.
  • During the joint exercise, the Indo-British Marines will jointly carry out various types of exercises. The joint exercise, conducted by the HMS Queen Elizabeth carrier, will further strengthen relations with friendly countries in the Indo-Pacific region, including India.
  • Britain hopes this will usher in a new era in security. The HMS Queen Elizabeth warship is expected to sail into the South China Sea after a joint exercise with the Indian Navy.
Training in Karwar
  • Following this, the Indian and British navies will conduct a military exercise at the port of Karwar in Karnataka from October 21 to 23. It will be followed by a joint exercise off the coast of Goa from October 24 to 27, according to a press release issued by the Indian Navy.
  • Twelve warships and more than 30 aircraft, including the Indian Rajput, will take part in the exercise.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel