Type Here to Get Search Results !

அமைச்சரவை குழுக்கள் மாற்றம் / CHANGE OF CABINET COMMITTEES

 

TAMIL
  • மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. 
  • சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில், 15 கேபினட் அமைச்சர்கள், 28 அமைச்சர்கள் என 43 பேர் பதவி ஏற்றனர்.
  • அமைச்சரவை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவை குழுக்களும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை போலவே முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை குழுக்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த குழுவில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங், மனுசுக் மாண்ட்வியா, ஆகியோர் உள்ளனர்.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே இந்த குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உள்ளனர்.
  • பிரதமர் தலைமையிலான முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் நாராயன் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அஸ்வின் வைஸ்ணவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
  • பிரதமர் தலைமை வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் பயிற்சிக்கான அமைச்சரவை குழுவில், அஸ்வினி வைஸ்ணவ், பூபேந்தர் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
  • பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • அதே போல பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ள நியமனத்திற்கான அமைச்சரவை குழுவிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
ENGLISH
  • The BJP-led National Democratic Alliance (NDA) came to power in 2019 for the second time in a row. There has been no change in the cabinet headed by Prime Minister Modi since then.
  • The Union Cabinet was recently reshuffled for the first time in about 2 years. Of these, 43 were promoted to 15 cabinet ministers and 28 ministers.
  • Following the cabinet reshuffle, the cabinet committees have also been reshuffled. Newcomers to the cabinet have been transformed into cabinet committees with the power to make key decisions, just as young people have been given opportunities.
  • Smriti Irani, Bhupender Yadav and Sarpanch Sonawale have been given a chance in the Cabinet Committee on Political Affairs headed by Prime Minister Modi. The team already includes Rajnath Singh, Amit Shah, Nitin Gadkari, Narendra Singh Tomar, Nirmala Sitharaman, Pius Goyal, Giriraj Singh and Manusuk Mandvia.
  • The Parliamentary Affairs Committee, headed by Defense Minister Rajnath, includes Virender Kumar, Kiran Riju and Anurag Thakur. The group already includes Amit Shah and Nirmala Sitharaman.
  • Narayan Rane, Jyotiraditya Cynthia and Aswin Vaishnav have been given a chance in the Prime Minister-led Cabinet Committee on Investment and Development.
  • The Cabinet Committee on Employment and Personal Training, headed by the Prime Minister, includes Aswini Vaisnav, Bhupender Yadav, Ramachandra Prasad Singh and Kishan Reddy.
  • No changes have been made to the Cabinet Committee, which makes key decisions regarding security. The panel includes Prime Minister Modi, Rajnath, Amit Shah, Nirmala Sitharaman and Jaisankar.
  • Similarly, the Cabinet Committee on Appointments, which includes only the Prime Minister and the Home Minister, has not been changed.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel