ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில், இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீர்ர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
- அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள உங்களுக்காக நாடு முழுவதும் மக்கள் மிகவும் எழுச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகக் கூறினார்.
- வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு , குறிக்கோள், அனைத்தும் உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, உங்களின் நற்பண்புகள் புதிய இந்தியாவிற்கு வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.
- பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையோடு நாடு உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது எனக் கூறிய பிரதமர் மோடி, முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள், நாடு உங்களுக்கு துணை நிற்கிறது எனக் கூறி உற்சாகமூட்டினார்.
டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம்
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பாலசந்திரன் உள்ளார். பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகிய 2 பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர். 12 உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.
- இந்நிலையில், தற்போது புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக கீழ்க்கண்ட நபர்களை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.
- அவர்கள் விவரம்: ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன் (தற்போது தொழிலாளர் நலஆணையர்), பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் (சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர்), முனைவர் கே.அருள்மதி (சென்னை), அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை (டான் போஸ்கோ,ஏற்காடு).
- இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்.
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,400 கோடி அபராதம்
- பிரான்ஸின் ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும் போது உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
- அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும் போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
- அபராதத் தொகையை செலுத்துவது குறித்து கூகுள் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-ஆவது நிறுவன தினம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் காணொலி மூலமாக உரையாற்றிய போது, நபார்டு வங்கி
- 2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.27,135 கோடிகடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
- தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக் கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்துகொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
- அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் உடனான சந்திப்பும் நடந்தது.
கூட்டுறவு வங்கிக்கு 'நபார்டு' விருது
- சென்னையில், 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின், 40வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
- அதில், நிதி மற்றும் வளர்ச்சி முனைப்புகளில், தமிழகத்தில் சிறந்த வங்கியாக, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், டி.என்.எஸ்.சி., எனப்படும், தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை, தமிழக தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்க, தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சக்திசரவணன் பெற்றார்.கடந்த, 1905ல் துவக்கப்பட்ட தலைமை கூட்டுறவு வங்கி, தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
- அந்த வங்கியின் வர்த்தகம், 2020 - 21ம் நிதியாண்டில், 21 ஆயிரத்து, 600 கோடி ரூபாயில் இருந்து, 26 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியர் அவராவார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 23-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் நடுவராக அவர் செயல்பட இருக்கிறார்.