சர்வதேச கிரிக்கெட் ரன் குவிப்பு முதலிடத்துக்கு முன்னேறி மித்தாலி அபார சாதனை
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ரன் விளாசிய இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
- மித்தாலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்சை (10,273 ரன்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.
- அவர் இதுவரை 217 ஒருநாள் போட்டிகளில் 7304 ரன் (சராசரி 52.80), 11 டெஸ்டில் 669 ரன் (சராசரி 44.60), 89 டி20ல் 2364 ரன் (சராசரி 37.52) என மொத்தம் 10,337 ரன் குவித்துள்ளார்.
- ஆண்கள் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் ரன் குவிப்பில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்), மித்தாலி ராஜ் (10,337 ரன்) என இரண்டு பிரிவிலும் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேலும், சச்சின் மற்றும் மித்தாலி இருவருமே ஒரே வயதில் (16 வயது, 205 நாள்) சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது அபூர்வ ஒற்றுமையாக அமைந்துள்ளது.
அனைத்து மின்இணைப்புகளிலும் உயிர் காக்கும் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும்
- தமிழ்நாட்டில், மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வழிவகை செய்யும்பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் பகிர்மான விதித் தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
- மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களைகாக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லா
- பிரிட்டன் கோடீசுவரர் ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின் கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக யூனிட்டி 22 என்கிற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது.
- இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11-ம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பிரான்சனுடன் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
- விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா இருக்கிறார். விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.
கோ-வின் சர்வதேச மாநாடு
- மத்திய சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத் துறை சார்பில் 'கோ-வின் சர்வதேச மாநாடு' காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
- உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஏராளமானோர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற பெருந் தொற்றை நாம் சந்திக்கவில்லை.
- கரோனா வைரஸுக்கு எதிராக எந்தவொரு நாடும் தனித்துப் போரிட முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
- இந்த இக்கட்டான நேரத்தில் மனித குலத்தின் நன்மைக்காக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதில் எந்த நாட்டில் மிகச் சிறந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதை அனைத்து நாடுகளும் பின்பற்றலாம்.
- கரோனா வைரஸ் பரவலின் தொடக்க காலம் முதல் இந்தியாவின் அனுபவங்கள், நிபுணத்துவத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து வருகிறோம். மருத்துவ, தொழில்நுட்ப ரீதியாக எங்களால் முடிந்தவரை உலக நாடுகளுக்கு உதவி செய்து வருகிறோம்.
- கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க முதலில் ஆரோக்கிய சேது செயலியை அறிமுகம் செய்தோம். இந்த செயலியை 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
- 'கோ-வின்' டிஜிட்டல் தளம், ஆரோக் கிய சேது செயலி தொடர்பான இந்தியாவின் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் பிரதமர் நரேந் திர மோடி உறுதி அளித்துள்ளார்.
- கரோனா வைரஸுக்கு எதிராக எந்த நாடும் தனித்துப் போரிட முடி யாது. இந்த இக்கட்டான நேரத்தில் 'ஒரே பூமி, ஒரே நலவாழ்வு' அணுகு முறையை பின்பற்றினால் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியும்
- கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் தொழில்நுட்பத் திறன், வியூகத்தை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இதே போன்ற டிஜிட்டல் தளங்களை உரு வாக்கித் தருமாறு கனடா, மெக்ஸிகோ, பனாமா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளன.
காகிதமில்லா பட்ஜெட் சட்டசபையில் சமர்ப்பிக்க புது திட்டம்
- தமிழக சட்டசபையில், முதன்முறையாக, காகிதம் இல்லாத, 'இ - பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்புதிய திட்டம் தொடர்பாக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- சட்டசபை விதிகள் குழு கூட்டம், அதன் தலைவரான சபாநாயகர் அப்பாவு தலைமையில், தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமேசான் புதிய சிஇஓ பதவியேற்பு
- கடந்த 1994ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் அதனை உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாற்றினார்.
- 120 லட்சம் கோடி மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 27 ஆண்டுகள் பதவி வகித்த பெசோஸ் ஜூலை 5ம் தேதி முதல் பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
- அந்தப் பதவிக்கு அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே-வை பெசோஸ் நியமித்துள்ளார். இதன்படி, பெசோஸ் நேற்று பதவி விலக, ஆண்டி ஜாஸே புதிய சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.
உலகின் முதல் வானிலை செயற்கைகோள் ஏவியது சீனா
- வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய, உலகின் முதல் வானிலை செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
- 8 ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 11 தானியங்கி பேலோடுகளுடன் ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று செலுத்தப்பட்டது.
- இதன் மூலம் சுற்றுச்சூழல் வெப்பம், ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை தகவல்கள், கனமழை, வெள்ளம், புயல், சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் பேரிடர், பனி மூடல், கடல் மட்ட தட்பவெப்பம், இயற்கை பேரிடர், சுற்றுச்சூழலியல் ஆகியவற்றால் ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
- இது தவிர, விண்வெளி தட்பவெப்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளை பெற தேவையான அயன் மண்டலத்துக்குரிய தரவுகள், விண்வெளி சுற்றுச்சூழல், சூரியன் ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
- முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். இதில் குன் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்.
அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் ‘நிபுண் பாரத் திட்டம்’ தொடக்கம்
- மத்திய அரசின் 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த நிபுண் பாரத் திட்டம் ஓா் இயக்கமாகச் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் 2-ஆம் வகுப்பு படிக்கும் 72.8 சதவீத குழந்தைகள் வாசிப்புத் திறன் இன்றியும், 3-ஆம் வகுப்பில் படிக்கும் 71.9 சதவீத குழந்தைகளுக்கு சாதாரண கணிதங்கள்கூட தெரியாத நிலை உள்ளதாகவும் ஆய்வில் அறியப்பட்டது.
- நாட்டில் உள்ள 3 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் தேவையைப் பூா்த்தி செய்து வைப்பதுதான் நிபுண் பாரத் இயக்கத்தின் நோக்கம். ஆசிரியா்கள், குழந்தைகளின் அடிப்படை மொழியை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- புரிதலுடன் வாசிக்கும் எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன் மூலம் குழந்தைகளை சிறந்த வாசகா்களாகவும், எழுத்தாளா்களாகவும் வளரவைக்க முடியும்.
- இதனால்தான் இந்த அடிப்படைக் கட்டத்தில் மகிழ்ச்சி, சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய முழுமையான கற்றல் அனுபவம், நிபுண் பாரத் திட்ட இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
- அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கிடைப்பது உடனடி தேசியப் பணியாக இருக்க வேண்டும் என 2020 தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதைக் கருத்தில்கொண்டுதான் மத்திய கல்வித் துறையின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை விரிவான வழிகாட்டுதலுடன் நிபுண் பாரத் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டம் பிரத்யேக பங்குதாரா்கள், நிபுணா்கள், ஆலோசகா்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
- இது தேசிய-மாநில-மாவட்ட- வட்டார-பள்ளி அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதை அமல்படுத்துவதற்காக 2021-22-ஆம் ஆண்டின் அடித்தள நிலைக்கு ரூ. 2,688.18 கோடியை சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது