குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் / World Day Against Child Labour
TNPSCSHOUTERSJune 13, 2021
0
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
ஐ.எல்.ஓவின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
நோக்கம்
இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.