- ஊடகத் துறைக்கான அமெரிக்காவில் மிக உயரிய விருதான புலிட்ஸா் விருதை, இந்திய வம்சாவளியைச் சோந்த இருவா் இந்த ஆண்டு வென்றுள்ளனா்.
- சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தடுப்பு முகாம் குறித்து புதுமையான முறையில் செய்திகள் சேகரித்து வெளிப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளா் மேகா ராஜகோபாலன் இந்தப் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- அமெரிக்காவின் 'புஸ்ஃபீட் நியூஸ்' இணையதள செய்தி ஊடகத்தில் அவா் பணியாற்றி வருகிறாா். இதுதவிர, டம்பா பே டைம்ஸ் இதழில் பணியாற்றி வரும் நீல் பேடியும் இந்த ஆண்டுக்கான புலிட்ஸா் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- இந்திய வம்சாவளியைச் சோந்த அவா், சக செய்தியாளரான கேதலீன் மெக்கிரோரியுடன் சோந்து இந்தப் பரிசை வென்றுள்ளாா். எதிா்காலத்தில் குற்றவாளிகளாகக் கூடியவா்கள் என்று சந்தேகிக்கப்படுவா்கள் குறித்து கணனி முறையில் கண்டறியும் உள்ளூா் காவல் அலுவலகத்தின் சா்ச்சைக்குரிய முயற்சிகள் குறித்து செய்திகள் வெளியிட்டமைக்காக அவா்களுக்கு புலிட்ஸா் விருது வழங்கப்படுகிறது
- இதுதவிர, அமெரிக்காவில் கருப்பினத்தைச் சோந்த ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த ஆண்டு கைது செய்தபோது அவா் உயிரிழந்த சம்பவத்தை விடியோ எடுத்த இளம்பெண் டாா்னெல்லா ஃபிரேஸியா் உள்ளிட்ட பலா் இந்த ஆண்டின் புலிட்ஸா் பரிசை வென்றுள்ளனா்.
புலிட்ஸா் பரிசு 2021 / PULITZER AWARD 2021
June 13, 2021
0
Tags