- மத்திய கல்வி அமைச்சகம், 2019 - 20ம் ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- கடந்த 2019 - 20ம் கல்வி ஆண்டில், தேசிய அளவிலான கல்வி மையங்களில், உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை 24.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது.
- இது, நிகர் நிலை பல்கலையில் 33.4 சதவீதம்; தனியார் பல்கலையில் 34.7 சதவீதம்; அரசு பல்கலையில் 61.2 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி மாணவ - மாணவியர் சேர்க்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மாணவியர் சேர்க்கையில் மட்டும் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- அதேநேரத்தில், மாணவ - மாணவியர் ஒட்டுமொத்த சேர்க்கையில் மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய அளவில், செயல்முறை சாரா கல்வியுடன் ஒப்பிடும்போது, தொழிற்கல்வியில் மாணவியரின் சேர்க்கையும் குறைந்து உள்ளது.
- எம்.பில், முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்பு தவிர அனைத்து நிலைகளிலும், மாணவர்களின் பங்கு அதிகமாக உள்ளது.
2019 - 20ம் ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வறிக்கை / Study on Higher Education Student on Ministry of Education
June 12, 2021
0
Tags