- கடந்த நூற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியலை சீனாவை சேர்ந்த ஹூரன் என்ற ஆய்வு நிறுவனம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
- மொத்தம் 50 பேர் கொண்ட இப்பட்டியலில் டாடா நிறு வனத்தை தொடங்கியவரும், மறைந்த தொழிலதிபருமான ஜாம்சேட்ஜி டாடா முதலிடத்தை பிடித்துள்ளார்.
- தனது வாழ்நாளில் அவர் ஏழை, எளியவர்களுக்காக 102 பில்லியன் டாலரை (ரூ.7 லட்சம் கோடி) வழங்கி இருக்கிறார். இந்த தொகையானது இலங்கை, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் ஜிடிபியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்) விட அதிகமாகும்.
- அடுத்த இடத்தில், மைக் ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா இடம்பெற்றுள்ளனர்.
பினாகா ராக்கெட் பரிசோதனை வெற்றி
- டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் மேம்பட்ட தரம் தாக்கும் திறனுடன் முழுதும் உள்நாட்டிலேயே பினாகா ராக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
- இவற்றின் ஒருங்கிணைந்த செயல்திறனுக்கான பரிசோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில் இரு நாட்களாக நடந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி அடுத்தடுத்து 25 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன.
- இதன் வாயிலாக 45 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் உடைய பினாகா ராக்கெட் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திய முதல் கிராம மக்கள் - காட்டூர் கிராமம்
- இந்தியாவிலேயே காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம், வேயாண் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் காட்டூர் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- தமிழகத்திலேயே முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட கிராமம் என்ற நற்பெயரை காட்டூர் கிராமம் பெற்றிருக்கிறது. இக்கிராமத்தில் மொத்தம் 3,332 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 18 வயதுக்கும் கீழே 998 பேர், அதாவது, கர்ப்பிணிகள் தடுப்பூசிகள் செலுத்த முடியாதவர்கள், மருத்துவ ரீதியாகத் தடுப்பூசி போடக்கூடாதவர்கள் தவிர 2,334 பேர் ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா்
- குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவா் ஒருவா் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்திய ராணுவ அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் பயணித்தாா்.