Type Here to Get Search Results !

TNPSC 22nd JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிறப்பு சீர்திருத்த நடவடிக்கைகளால் 23 மாநிலங்களுக்கு ரூ.1.06 லட்சம் கோடி நிதி

  • சிறப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் 23 மாநிலங்கள் ரூ.1.06 லட்சம் கோடியை கூடுதலாகப் பெற்றுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  • வழக்கமான சீர்திருத்தம் மற்றும் ஊக்க சலுகை என்ற தலைப்பில் அவர்வெளியிட்ட கருத்தில், 23 மாநிலங்கள் ரூ.2.14 லட்சம் கோடி பெற தகுதி பெற்றிருந்தன. இவை மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ரூ.1.06 லட்சம் கோடியைப் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மத்திய, மாநில அரசுகளிடையிலான உறவு மேம்பட்டுள்ளதன் வெளிப்பாடுதான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆத்மநிர்பாரத் எனப்படும் சுயசார்பு பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • மாநில அரசுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை விட கூடுதலாக 2 சதவீதம் பெற அனுமதிக்கப்படும். அதில் ஒரு சதவீத தொகையானது மத்திய அரசு செயல்படுத்தும் சில பொருளாதார சீர்திருத்தங்களை கட்டாயம் மேற்கொள்வதற்காகும்.
  • இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதும் அவர்கள்நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வதற்குமானதாகும். நிதி ஸ்திரத்தன்மை இதில் இரண்டாவது அம்சமாகும். ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கைக்கும் கால் சதவீதம் ஊக்க தொகை வழங்கப்படும்.
  • மத்திய அரசு கொண்டு வந்த முதலாவது நடவடிக்கை, 'ஒரு தேசம், ஒரு ரேஷன்' கார்டு என்பதாகும். அனைத்துரேஷன் அட்டைகளும் ஆதார் அட்டையுடன் இணைத்து, ரேஷன் கடைகள் அனைத்தும் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். 
  • இந்தத் திட்டத்தின்கீழ் நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் பொருளை வாங்கிக் கொள்ளலாம். அடுத்தது, மாநிலங்களில் தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்குவது. இதற்கேற்ப மாநில அரசுகள் லைசென்ஸ் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும். 
  • 7 நடைமுறைகள் தானியங்கி முறையில் நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். வெறுமனே கட்டணத்தை செலுத்தி அனுமதி பெறக்கூடியதாக எவ்வித இடையூறும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.
  • மூன்றாவதாக, மாநில அரசுகள்சொத்து வரி மற்றும் கழிவுநீரகற்று கட்டணத்தை ஒரே சீராக்குவதாகும். முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பது போன்றவையும் இதில் அடங்கும்.நான்காவது சீர்திருத்தம், மின்கட்டண மானியத்தை பயனீட்டாளர்களின்வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றுவதாகும்.

லட்சத்தீவில் பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தடை

  • இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளாவின் கடலோரத்தின் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ளது.
  • லட்சத்தீவில் நிர்வாகியாக நியமிப்பட்டுள்ள பிரஃபுல் கோடா படேல் அங்குள்ள மக்களுக்கு எதிராக பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  • இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது, சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மீனவர்களின் குடிசையை அகற்ற உத்தரவிடுதல் என பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • இது தொடர்பான ஒரு வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஃபுல் கோடா படேல் பிறப்பித்த பள்ளிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தல் மற்றும் பால் பண்ணைகள் மூடல் ஆகிய 2 உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3வது இடம்

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை தென்னிந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே மூதலிடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கல்வி உலகம் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஓவ்வொரு வருடமும் கல்வி உலகம் இதழானது நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வில் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் போதிக்கும் திறன், கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்களின் நலம் மற்றும் மேம்பாடு, புதிய வகை ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் கண்டுபிடுப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் தரமான புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல், பாடத்திட்டம் சார்ந்த தொழில்நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லூரிவளாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தரம் மற்றும் வளாக கட்டமைப்புகளை உருவாக்குதல், உலகமயமாக்குதல், தலைமைப்பண்புகள் மற்றும் நிர்வாகத்திறனை ஊக்குவித்தல் மற்றும் காலத்திற்கேற்ப கல்வி பாடத்திட்டங்கள் அகியவற்றின் அடிப்படையில் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரவரிசை பட்டியல் கல்வி உலகம் இதழால் வெளியிடப்பட்டது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே முதலிடத்தையும் இந்தியாவில் உள்ள 63 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் மூன்றவது இடத்தையும், இந்திய நாட்டில் உள்ள 150 ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களில் 53 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதுணைவேந்தர், குமார், தெரிவித்தர்

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

  • 10, 11, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிபிஎஸ்இ மதிப்பிடும் முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அத்துடன், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  • சிபிஎஸ்இ தேர்வுகள் பல்வேறு ஆலோசனைக்கு பின்பே ரத்து செய்யப்பட்டது எனவும் சிபிஎஸ்இ வாரியத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
  • அதேபோல், வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தன்னுடைய கருத்தினை முன் வைத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel