Type Here to Get Search Results !

TNPSC 21st JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச யோகா தினம்: `பெருந்தொற்று காலத்தின் நம்பிக்கை ஒளி' - திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி

  • கடந்த ஆறு ஆண்டுகளாக, ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • இந்த ஆண்டு யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் ஆரோக்கியத்துக்கான யோகா. இந்தியா முழுவதும் பல்வேறு யோகா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக யோகா தினம் பெருமளவில் மக்கள் கூடும் கூட்டமாக நடைபெறவில்லை.
  • தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் தொடங்கியது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, யோகா தின சிறப்புரை ஆற்றினார். 
  • பிரதமர் மோடி, ``ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. 
  • யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை" என்றவர், `நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' எனும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
  • தொடர்ந்து, ``உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது `எம்-யோகா' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும். இது நமது 'ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்' என்ற குறிக்கோளில் நமக்கு உதவும்.
  • இன்று மருத்துவ விஞ்ஞானம்கூட மருத்துவ சிகிச்சையைத் தவிர்த்து, குணப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குணப்படுத்தும் செயல்முறைக்கு யோகா உதவுகிறது" என்றார் பிரதமர் மோடி.

தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்த இந்தியா

  • நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 30.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி 42 லட்சத்து 65 ஆயிரத்து 157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

தமிழ்நாட்டின் 16-வது சட்டபேரவையின் முதல் கூட்டத்தொடர் - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

  • தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையை, "வணக்கம்" என தமிழில் தொடங்கினார். மேலும், "தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்" என்றார்.
  • அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் அமைக்கப்படும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.
  • ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். 'உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.
  • விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும். நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.
  • 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்
  • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
  • அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும்.
  • தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்; அதை இந்த அரசு உறுதி செய்யும்.
  • பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
  • கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என கூறினார்.
  • சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த 'சிங்கார சென்னை 2.0' திட்டம் கொண்டுவரப்படும்.
  • ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனிவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்.
  • தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
  • வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.
  • திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்.
  • ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.
  • லோக் ஆயுக்தவுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
  • திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
  • குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும்.
  • ஓபிசி இடஒதுக்கீட்டில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.25 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.
  • முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.
  • அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும்.
  • எல்லாருக்கும் எல்லாம் என்ற மாபெரும் சமூக தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்.
  • மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும், முழுமையாக பயனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்
  • வங்கிகள் உட்பட அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழை இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம் என கூறினார்.

லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை
  • லாரல் ஹப்பார்ட் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
  • அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • ஆறாண்டுகளுக்கு முன்பு, போட்டியாளர்களின் தேர்வு முறை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிகளில் மேற்கொண்ட மாற்றத்தின்படி, இவர் தகுதிவாய்ந்த நபராக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக, கடந்த 2013ஆம் நடந்த பளு தூக்குதல் போட்டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள நெபுலாவை படம்பிடித்த நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி
  • ஹப்பிள் கிளாசிக் நம் விண்மீன் மண்டலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களை உருவாக்கும் பகுதிகளில் ஒன்றான கரினா நெபுலாவின் ஒரு சிறிய பகுதியை ஆராய்கிறது. 
  • நெபுலா எங்களிடமிருந்து சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது மற்றும் பெரும்பாலும் இது ஹைட்ரஜன் வாயுவால் ஆனது" என்று கேப்சன் செய்துள்ளது.
  • நெபுலா என்பது முக்கியமாக ஹைட்ரஜன் வாயுவின் குளிர்ந்த மேகம் ஆகும். இது தூசியால் மூடப்பட்டிருக்கும். இது மேகத்தை ஒளிபுகாதாக்குகிறது. இப்பகுதியில் உள்ள இளம் நட்சத்திரங்களிலிருந்து புற ஊதா ஒளியைக் கொண்டு மேகம் அரிக்கப்படுகிறது. அவை பலவிதமான கற்பனை வடிவங்களை உருவாக்குகின்றன.
  • ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி என்பது விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய தொலைநோக்கி ஆகும். இது 1990ம் ஆண்டில் ஏப்ரல் 24ம் தேதி, விண்வெளி விண்கலம் டிஸ்கவரி மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி நாசாவுக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கும் (ஈஎஸ்ஏ) இடையிலான சர்வதேச ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.
  • ஹப்பிள் பூமியிலிருந்து சுமார் 547 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. மேலும் வினாடிக்கு 5 மைல் தூரம் பயணிக்கிறது. இது கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்ற வானத்தில் உள்ள பொருட்களின் வடிவமைப்பை கூர்மையான படம் எடுக்கிறது. 
  • இதுவரை இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளது. இதில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய விவரமான படங்கள், பில்லியன்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் வால்மீன் துண்டுகள் வியாழனின் வளிமண்டலத்தில் மோதியது ஆகியவை அடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel