பாலியல் குற்றங்களைத் தடுக்க வாடிகன் சட்டத் திருத்தம்
- தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வயது வந்த நபா்களிடமும் பாதிரியாா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதைக் குற்றமாக்கும் வகையில் தேவாலயச் சட்டங்களில் போப் பிரான்சிஸ் மாற்றங்கள் செய்துள்ளாா்.
- முறைப்படி நியமிக்கப்படாமல் தேவாலயப் பதவிகளை வகிப்பவா்களுக்கும் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதற்கு புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- உலகம் முழுவதும் சுமாா் 130 கோடி கத்தோலிக்க தேவாலயங்கள் பின்பற்றும் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது
- புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது.
- அந்த வகையில் இந்த ஆண்டுஉலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019-ம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதை பாராட்டும் வகையில் ஹர்ஷ் வர்தனுக்குஇந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையம் தலைவராக நீதிபதி மிஸ்ராவை நியமிக்க பரிந்துரை
- தேசிய மனித உரிமை ஆணையத்தின் அடுத்த தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.
- இந்தியாவில் கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் தலைவர் ஒருவரையும், 4 உறுப்பினர்களையும் கொண்டு செயல்படுகிறது. இதன் தலைவர் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியாக இருப்பார்கள்.
- மேலும், ஆணையத்தின் ஒரு உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவமிக்கவர்களாக இருப்பார்கள்.
மைண்ட் ஷேர் இந்தியா 5 விருதுகளை வென்றது
- குரூப் எம்-ன் ஊடக ஏஜென்சி நிறுவனமான மைண்ட்ஷேர் இந்தியா, பெஸ்டிவல் ஆப் மீடியா குளோபல் விருதுகள் 2021- என்ற விழாவில், ஏஜென்சி ஆப் தி இயர் என்ற பட்டத்தையும், 2 தங்கம், 3 வெள்ளி என 5 விருதுகளையும் பெற்றுள்ளது.
- மேலும், கிராண்ட் பிரிக்ஸ் என்ற டைட்டிலையும் வென்றது. இந்த ஆண்டு உலக கலந்துரையாடல் குழுவில் வென்ற ஒரே நிறுவனம் மைண்ட்ஷேர். பிரபல பிராண்டுகளுக்கான சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மின்னணு ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்தியது போன்றவைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா நியமன உறுப்பினர்
- முன்னாள் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, ராஜ்யசபா நியமன உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
- இதனால் ராஜ்யசபாவில் உருவான காலியிடத்திற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மீண்டும் அவரையே தேர்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- அதேபோல், மற்றொரு நியமன உறுப்பினர் ரகுநாத் மோகபத்ரா மறைவின் காரணமாக உருவான காலியிடத்தை நிரப்ப, வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.9 சதவீதமாக இருக்கும் என்றும்; பொருளாதார மீட்சி ஆங்கில எழுத்தான, 'டபுள்யு' வடிவில் இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையே, 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்' நாட்டின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 9.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்
- சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக் (SVA.O) தயாரித்த COVID-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- உலக சுகாதார மையத்தின் அவசர கால பட்டியல் அனுமதி என்பது ஒரு மருந்தன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நம்பலாம் என்பதற்கான சமிக்ஞையாகும்.
சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
- கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- நடப்பாண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
2016ல் பாராசூட் உதவி இல்லாமல் 25000 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை படைத்த அமெரிக்கர்
- கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அன்று மூத்த அமெரிக்க ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸ் என்பவர் எந்தவித பாராசூட் உதவியும் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25,000 அடி (7600 மீட்டர்) உயரத்தில் இருந்து குதித்த முதல் நபர் என்ற வரலாற்றை உருவாக்கினார்.
- 'ஹெவன் சென்ட்' என்று அழைக்கப்படும் ஸ்டண்டின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸுக்கு அப்போது வயது 42 இருக்கும். அவர் ஒரு பிளேனில் இருந்து கீழே குதித்து, 30 முதல் 30 மீட்டர் நிகர அமைப்பு கொண்ட மென்மையாக வலையில் விழுந்தார்.