தேசத்துரோக சட்டத்தின் வரலாறு
- காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றுதான் இந்த தேசத்துரோக சட்டம். இந்த சட்டம் 19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.
- பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே தேசத்துரோக சட்டத்தை கடந்த 1837 வாக்கில் முன்மொழிந்துள்ளார்.
- இருப்பினும் சில பல காரணங்கங்களால் இந்த சட்டத்தை அப்போது நடைமுறைக்கு கொண்டு வராமல் இருந்துள்ளனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.
- பின்னர் 1870இல் பிரிட்டிஷ் நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் பலமான காரணமும் இருந்தது. சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தடுக்க இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
- அந்த சட்டம் அப்படியே வாழையடி வாழையாக வாழ்வாங்கு சுதந்திர இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டத்தில் தொடர்ந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைந்துள்ள அரசுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவது, அரசுக்கு எதிராக எழுதுவது, நாடகம் மற்றும் படம் அல்லது வேறு வகையில் தேசத்திற்கு எதிரான செயல்களை செய்வது மாதிரியானவை தேசத்துரோக குற்றத்தின் சட்டப்பிரிவில் வருகிறது.
- இந்த குற்றம் நிரூபணமானால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தொடங்கி ஆயுள் தண்டனை வரை சிறையில் அடைபட்டு இருக்க வேண்டும்.
- இதில் கடந்த 2019இல் மட்டும் 96 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016 உடன் ஒப்பிடும் போது வழக்கு பதிவு எண்ணிக்கை 160 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
- அதே நேரத்தில் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கால் செய்யப்பட்டு, தண்டனை பெற்றவர்கள் 3.3 சதவிகிதம் பேர் தான். 96 பேரில் 2 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.