Type Here to Get Search Results !

கொரோனா உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு கிரேக்க மொழியிலான பெயர் / Greek Name for Corona Mutated Virus

 

  • புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • கடந்த, 2019 டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது; 
  • பின், பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கியது.'கோவிட் - 19' என அழைக்கப்பட்ட இந்த தொற்றை, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'சீன வைரஸ்' என்றே குறிப்பிட்டார்.
  • இதனால், சீனா ஆத்திரமடைந்தது. இந்த தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கிய உடன், உருமாற்றம் அடைந்தது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய வைரஸ்கள்கண்டறியப்பட்டன.
  • இதற்கு ஆய்வாளர்கள், தங்கள் வசதிக்காக, எண்களுடன் கூடிய அறிவியல் பெயர்களை சூட்டினர்.
  • நாளடைவில், உருமாற்றம் அடைந்த வைரஸ் எந்த நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டதோ, அந்த நாட்டின் பெயருடன் சேர்த்து, அந்த வைரசை குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது; இது, சம்பந்தப்பட்ட நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்தது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட வைரஸ் வகை, பி.1.617.1 என அழைக்கப்படுகிறது. சமீபத்திய இரண்டாவது அலையின் போது கண்டறியப்பட்ட வகை, பி.1.617.2 என அழைக்கப்படுகிறது.
  • இந்நிலையில் உருமாற்றம் அடையும் வைரஸ்களுக்கு, கிரேக்க மொழியிலான பெயர்களை சூட்டி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, உலகசுகாதார நிறுவனம் முடிவு செய்தது.
  • ஐரோப்பிய நாடான பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'ஆல்பா' என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'பீட்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
  • தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கண்டறியப்பட்ட, பி.1 வகை, 'காமா' என்றும், பி.2 வகை, 'ஸீடா' என்றும் அழைக்கப்படுகின்றன.அமெரிக்க வகை வைரஸ்கள், 'எப்சிலான்' மற்றும் 'லோட்டா' என அழைக்கப்படுகின்றன.
  • இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும், பி.1.617.2 ஆகியவற்றுக்கு, 'கப்பா, டெல்டா' என பெயரிடப்பட்டுள்ளன.களங்கம்வைரஸ் குறித்து பேசும்போது, எந்த நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால், பெயர் சூட்டும் முறை பின்பற்றப்படுகிறது.
  • மற்றபடி, ஆராய்ச்சி பணிகளுக்கு, வைரசின் அறிவியல் பூர்வமான பெயர்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொது விவாதங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடும் போது, இந்த புதிய பெயர்களை சொல்லி அழைப்பதே சிறந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel