ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த Coca-Cola நிறுவனம்
- யூரோ கோப்பை தொடரின் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. இதற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த ரொனால்டோ, மேஜையில் Coca-Cola குளிர்பான பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தை பார்த்தார்.
- உடனடியாக அந்த பாட்டில்களை அகற்றிய ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை மேஜையில் வைத்துவிட்டு "அகுவா" என்றார். போர்ச்சுகீசிய மொழியில் "அகுவா" என்றால் தண்ணீர் என்று பொருள்.
- குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, தண்ணீரை அருந்துங்கள் என்ற ரொனால்டோவின் இந்த செயல், சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த, ரொனால்டோ, டிரிங்க் வாட்டர் என்ற ஹாஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகின.
- இந்த விவகாரம் Coca-Cola நிறுவன சந்தை மதிப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மளமளவென சரிவடைந்தது.
- இதனால், 4 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடிக்கும் மேல் அந்நிறுவனம் இழப்பை சந்திக்க நேர்ந்தது. மேலும் பங்கு சந்தையில் coca -cola நிறுவனத்தின் பங்கு 1.6% சரிந்துள்ளது.
விவாடெக் டிஜிட்டல் மாநாடு 2021
- ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மாநாடு விவாடெக். ஐரோப்பிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். 2016-ம் ஆண்டிலிருந்து இம்மாநாடு பாரீஸில் நடைபெறுகிறது. இதில் காணொலி முலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:
- இந்தியாவும் பிரான்ஸும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமானது தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நுட்பங்களாகும்.
- இப்போதைய காலகட்டத்தில் இரு நாடுகளிடையிலான தொழில்நுட்ப உறவு மேலும் வலுப்பட வேண்டியது மிகவும் அவசியம். இது இந்தியா மற்றும் பிரான்ஸுக்கு மட்டும் நன்மை அளிக்கக்கூடியது அல்ல.
- உலகம் முழுவதற்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தை பகிர்கிறது. அதேபோல பிரான்சின் அடோஸ் நிறுவனம் அதிவிரைவான சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியாவுக்கு அளித்துள்ளது.
- இதேபோல பிரான்சின்கேப்ஜெமினி, இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தகவல்தொழில்நுட்ப பகிர்வில் முன்னோடியாகத் திகழ்கின்றன.
- உலக நாடுகளுக்கு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்தது கரோனா தொற்றுதான். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நமக்கு கைகொடுத்தது தகவல் தொழில்நுட்பமும், நவீன மருத்துவமும்தான்.
- கரோனாவுக்கு முந்தைய சூழல் மற்றும் கரோனாவுக்கு பிந்தைய சூழலில் புத்தாக்க நடைமுறைகள் எவ்வளவுதூரம் நமக்கு உதவியாக இருந்தனஎன்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதார், மக்களுக்கு டிஜிட்டல் மூலமாக நிதி உதவி அளிக்க பேருதவியாக இருந்தது.
- இந்தியாவில் கரோனா தொற்று பரவிய காலத்தில் பல்வேறு மருத்துவ கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட தட்டுப்பாடு நிலவியது. இந்த காலகட்டத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
துாதர்கள் நியமனம் பைடன் - புடின் முடிவு
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சந்தித்துப் பேசினர்.
- அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின், புடினை முதல்முறையாக சந்தித்தார். நான்கு மணி நேரம் நடந்த பேச்சுக்குப்பின், இரு தலைவர்களும், நிருபர்களை சந்தித்தனர்.
- பைடன் கூறுகையில், "பேச்சு மிக சுமூகமாக நடந்தது. இரு தரப்பிலும், கோபத்தையோ, வெறுப்பையோ ஏற்படுத்தும் வகையில், எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை,'' என்றார். புடின் கூறுகையில், "இந்த பேச்சில், துாதர்களை மீண்டும் நியமிக்க, உடன்பாடு ஏற்பட்டது," என்றார்.
இந்திய வம்சாவளியைச் சோந்தவா் அமெரிக்க நீதிபதியாக நியமனம்
- இந்திய-அமெரிக்க சிவில் உரிமைகள் பிரிவு வழக்குரைஞராக இந்திய வம்சாவளியைச் சோந்த சரளா வித்யா நாகலா பணியாற்றி வந்தாா். இவரை, கனெக்டிகட் மாகாண மாவட்ட நீதிபதியாக அமெரிக்க அதிபா் பைடன் நியமனம் செய்துள்ளாா்.
- இவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் கனெக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் தெற்கு ஆசியாவைச் சோந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை சரளா பெறுவாா்.
- அமெரிக்க அட்டா்னி அலுவலகப் பணியில் கடந்த 2012-இல் இணைந்த சரளா பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.
யூரோ தொடரில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனை
- நடப்பு யூரோ தொடரின் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக, யூரோ கோப்பை பைனல்ஸ் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியை (9 கோல்) பின்னுக்குத் தள்ளி 11 கோல்களுடன் முதலிடத்துக்கு முன்னேறினார் ரொனால்டோ.
- சர்வதேச போட்டிகளில் தாய்நாட்டுக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ரொனால்டோ (106 கோல்), ஈரான் வீரர் அலி டையி (109) சாதனையை சமன் செய்ய இன்னும் 3 கோல் அடித்தால் போதும்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் உமா மகேஸ்வரி நியமனம்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பணியிடம் காலியாக இருந்தது.
- இதையடுத்து, தமிழக ஆளுநரின் அனுமதியின் பேரில், அந்த பணியிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஏபி உர மானியம் 700 ஆக அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாட்டில் யூரியாவுக்கு அடுத்தப்படியாக, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 1700க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், 500 மானியமாக வழங்கப்பட்டது.
- இதனால், விவசாயிகளுக்கு ஒரு மூட்டை 1,200 என, உற்பத்தி நிறுவனங்கள் இதை விற்பனை செய்து வந்தது. கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் டிஏபி உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
- இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில், டிஏபி உரத்திற்கான மானியத்தை மூட்டைக்கு 700 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உரத்திற்கான மானியம் உயர்வால் அரசுக்கு 14,775 கோடி கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, யூரியாவுக்கான மானியமாக 900 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியவும், அதை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், 'ஆழ்கடல் திட்டம்' உருவாக்கப்பட உளளது. இதற்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை திட்டம் - முதல்வர் துவக்கி வைத்தார்
- கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திட, அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும்.
- தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகையாக வைக்கப்பட்டு, அவர்களுக்கு 18 வயது நிறைவு பெறும் போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வாழும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- இந்நிலையில், கோவிட்டால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- முதல்கட்டமாக, பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்.
- மேலும், பெற்றோரில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக தலா ரூ.3 லட்சம் காசோலைகளை வழங்கினார்.