புதுச்சேரி சபாநாயகர் பதவி பாஜக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு
- தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து அங்கு என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த மே மாதம் 7ஆம் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
- இந்தச் சூழலில் என்ஆர்காங்கிரஸ்- பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
- வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- புதுச்சேரியில் அரசியல் வரலாற்றிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மணலூர் அகழாய்வில் முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
- தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. மேலும் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் நடக்கிறது.
- மணலூரில் இதுவரை 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் 2வது குழியில் மூன்று அடி ஆழத்தில் சிறு குழந்தையின் எலும்புக்கூட்டின் மேற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
- இதுவரை நடந்த அகழாய்வில் கொந்தகை கிராமம்தான் பண்டைய மக்களின் மயான காடாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
- கொந்தகையில் 3 நிலைகளில் பண்டைய மக்களை புதைத்திருப்பது கண்டறியப்பட்டது. தற்போது முதன்முறையாக மணலூர் அகழாய்வு தளத்தில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு வெளியே தெரிந்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மணலூர் மனிதர்களின் வாழ்விடமாகவும் மற்றும் தொழிற்கூடங்கள் இயங்கி வந்த இடமாகவும் கருதப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டதால் கீழடி அகழாய்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எலும்புகளின் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு அதன் காலம் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
7 முக்கிய இலக்குகளை அடைய கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட 7 முக்கிய இலக்குகளை அடைவதற்கு, கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களை வரவேற்று பேசியபோது, வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! ஆகிய 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சி தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என தெரிவித்தார்.
- போலந்தின் வார்சா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் கிறிஸ் டினா பெரேஸாவுடன் மோதினார்.
- இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான வினேஷ் போகத் இந்த சீசனில் வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
- அவர் ஏற்கெனவே கடந்த மார்ச்சில் நடைபெற்ற மேட்டியோ பெல்லிகோன் தொடரிலும், ஏப்ரலில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ஷிப்பிலும் தங்கம் வென்றிருந்தார்.