ரூ.1.53 லட்சம் கோடி வங்கி வாராக்கடன்கள் தள்ளுபடி
- ஒவ்வொரு நிதியாண்டிலும் வசூல் செய்ய முடியாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றன. வாராக்கடன்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
- கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களில் 2-ஆவது அதிகபட்சத் தொகையாகும். கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருந்தன.
- முக்கியமாக, கடந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் 55.65 சதவீதமானது கடைசி காலாண்டில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- எஸ்பிஐ - ரூ.34,403 கோடி
- யெஸ் வங்கி - ரூ.17,208 கோடி
- பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.15,877 கோடி
- பரோடா வங்கி - ரூ.14,878 கோடி
- ஆக்சிஸ் வங்கி - ரூ.13,906 கோடி
- ஐசிஐசிஐ வங்கி - ரூ.9,608 கோடி
- யுசிஓ வங்கி - ரூ.9,411 கோடி
- சென்ட்ரல் ஃபேங்க் - ரூ.5,992 கோடி
- 2017-18 - ரூ.1.44 லட்சம் கோடி
- 2018-19 - ரூ.2.54 லட்சம் கோடி
- 2019-20 - ரூ.1.45 லட்சம் கோடி
- 2020-21 - ரூ.1.53 லட்சம் கோடி.
பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
- பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கிரீஸை சேர்ந்த சிட்சிபாஸ் - செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
- 7-6, 6-2 என முதல் இரண்டு செட்களில் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார் . அதன்பிறகு மீண்டு வந்த ஜோகோவிச் 6-3, 6-2, 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார் . 6 வது முறையாக ஜோகோவிச் 2 செட்கள் தோல்வியிலிருந்த் மீண்டெழுந்து போட்டியை வென்றுள்ளார் .
- பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று 19ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
- ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் 20 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் . ஜோகோவிச் அவர்களுடன் இணைய இன்னும் ஒரு பட்டம் மீதமுள்ளது .
'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.10,870 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
- நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
- இதனிடையே, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2019-ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தொகையை மத்திய ஜல் சக்தி துறை ஒதுக்கி வருகிறது.
- அந்த வகையில், மேற்குவங்கத்துக்கு கடந்த வாரம் 6,998.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு முறையே ரூ.3,410கோடியும், ரூ.5,117 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.9,262 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தரபிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,870 கோடியை மத்திய ஜல் சக்தி துறை நேற்று ஒதுக்கியுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் உள்ள 97 ஆயிரம் கிராமங்களில் 2.63 கோடி வீடுகள் உள்ளன. அவற்றில் 30.04 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
- 'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு முன்பாக வெறும் 5.16 லட்சம் வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பை பெற்றிருந்தன. இன்னமும் 2.33 கோடிவீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்பு
- 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
- இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.
பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
- பாதுகாப்புத் துறையில் புத்தாக்கசிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புமற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
- இதன் மூலம் பாதுகாப்புத் துறைசார்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகள், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு பட்ஜெட் நிதி ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் 300 ஸ்டார்ட்அப்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள் பயன்பெறுவர்
- ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை சர்வதேச அளவில் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
- இந்நிலையை மாற்றுவதற்காக பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முடிவு செய் துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாட உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு சாதனங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன் மூலம் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ராணுவ திறன், பாதுகாப்பு புத்தாக்க நிறுவனத்துக்கு (டிஐஓ) இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் விமானப்படைக்கான விமானங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
- இன்ஸ்டிட்யூட் ஆஃப் டைரக்டர்ஸ் நியூதில்லி என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை, எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற் பத்தி, சுரங்கம் மற்றும் உலோகம் போன்ற நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.
- இந்நிலையில், கரூர் மாவட்டம் புகழூர் டிஎன்பிஎல் ஆலையானது, ஆலையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளித்தல்,
- இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்,
- திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குதல், ஏரி குளங்கள், கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் போன்ற எண்ணற்ற சமுதாய நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 2020-ஆம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணர்வுக்காக வழங்கப்படும் தங்கமயில் விருதுக்கு தேசிய அளவில் புகழூர் காகித (டிஎன்பிஎல்) ஆலை தேர்வு செய்யப்பட்டது.