- ஐக்கிய நாடுகள் சபை, முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம்தேதியை 'முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாளாக' 2006-ம்ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது.
- அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம், பள்ளி மாணவ, மாணவியருக்கு 'முதியோரை மதித்தல்' பற்றி குடியரசுத் தலைவர் வானொலி மூலம் சிறப்புரையாற்றலாம்.
- ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி, அனைத்து பள்ளி மாணவ - மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
- மேலும், முதியோரை மதித்து நடக்கும்இளைஞர்களைப் பாராட்டி 'பத்ம' விருதுக்கு நிகரான தேசிய விருதை வழங்க ஏற்பாடு செய்யலாம்.
- இவ்விருதுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரைத்தேர்ந்தெடுத்து ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கஏற்பாடு செய்ய வேண்டும்.
- இது இளைஞர்களிடையே முதியோரை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிதும் உதவும். அதேபோல், 'முதியோரை மதித்தல்' பற்றிய கட்டுரைகள் பள்ளி பாட நூலில் இடம் பெறச் செய்யலாம்.
முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாள் / Elder Abuse Eradication Awareness Day
June 15, 2021
0
Tags