- உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
- இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
- இந்த கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
- 28 சதவீதம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆகஸ்டில் மார்னிங் கன்சல்ட் இதேபோல கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 82 சதவீதம் பேர் ஆதரவும், 11 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
- தற்போதைய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்திருந்தாலும் உலகளாவிய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
- மார்னிங் கன்சல்ட் கருத்துக் கணிப்பில் இத்தாலி பிரதமர் மரியோ தெராகி 65 சதவீத ஆதரவினைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
- மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 63%, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 53%, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 53%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் 48%, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 37%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் 36%, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ 35%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 35%, ஜப்பான் பிரதமர் யோசிகிடோ சுகா 29% வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸாஸ் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் உலக தலைவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது.
- இந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் சரிந்திருக்கிறது. எனினும் உலகளாவிய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் குறித்து ஆய்வு / REPORT OF MOST INFLUENTIAL LEADERS IN THE WORLD
June 19, 2021
0
Tags