- கடந்த 2004ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் உலக பல்கலைக் கழகங்களின் தரவரிசையை "QS WORLD UNIVERSITY RANKINGS" வெளியிட்டு வருகிறது.
- பல்கலைக்கழகங்களின் தரத்தை, பாடதிட்டங்களின் தரம், பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களின் நன்மதிப்பு, பேராசிரியர் - மாணவர் விகிதம், சர்வதேச பேராசிரியர்கள் விகிதம், சர்வதேச மாணவர் விகிதம், வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய 6 அளவுகோல்களின்படி தரம் வரிசைப்படுத்தப்படுவதாக QS WORLD UNIVERSITY RANKINGS தெரிவிக்கிறது.
- சர்வதேச அளவில் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை வெளியிடும் முக்கிய மூன்று அமைப்புகளில் ஒன்றாக QS WORLD UNIVERSITY RANKINGS கருதப்படுகிறது.
- QS WORLD UNIVERSITY RANKINGS-ன் ஆய்வின்படி, சர்வதேச அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக் கழகங்கள் பட்டியல்.
- அமெரிக்காவின் Massachusetts Institute of Technology நூற்றுக்கு நூறு புள்ளிகளுடன் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாம் இடத்தை, நூற்றுக்கு 99.5 புள்ளிகளுகளுடன் இங்கிலாந்தின் University of Oxford பிடித்துள்ளது.
- நூற்றுக்கு 98.7 புள்ளிகள் பெற்ற அமெரிக்காவின் Stanford University மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
- இதே புள்ளிகளைப் பெற்றுள்ளதால், இங்கிலாந்தின் University of Cambridge-ம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
- அமெரிக்காவின் Harvard University, 98 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
- அமெரிக்காவின் California Institute of Technology 97.4 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
- இங்கிலாந்தின் Imperial College of London 97.3 புள்ளிகளுடன் 7ம் இடத்தை பெற்றுள்ளது.
- சுவிட்சர்லாந்தின் ETH Zurich - Swiss Federal Institute of Technology 95.4 புள்ளிகள் பெற்று 8ம் இடத்தை பிடித்துள்ளது.
- இதேபுள்ளிகளுடன், இங்கிலாந்தின் University College London 8ம் இடத்தை பெற்றுள்ளது.
- அமெரிக்காவின் University Of Chicago 94.5 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது.
- இந்த வரிசையில் சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் 225-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.