- பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், உலக அளவில், உயர் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைகளின் தரவரிசை பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
- இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல், வெளியிடப்பட்டது. இதில், சிறந்த 200 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன.
- இந்த பட்டியலில், 'மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்வி நிறுவனம், தொடர்ந்து, 10வது ஆண்டாக, முதலிடத்தை பிடித்துள்ளது.இதில், இந்திய கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.
- அதன்படி, மும்பையில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனம், 177வது இடத்தை பிடித்து உள்ளது.
- இதேபோல், டில்லி ஐ.ஐ.டி., 185வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, 193வது இடத்தில் இருந்த டில்லி ஐ.ஐ.டி., தற்போது, தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதேபோல், பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' நிறுவனம், 186வது இடத்தை பிடித்துள்ளது.
- அதே நேரத்தில், சிறந்த ஆராய்ச்சி பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பிரிவில், கவுஹாத்தி ஐ.ஐ.டி., நிறுவனம், 41வது இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பல்கலைகளின் தரவரிசை பட்டியல் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் / WORLD UNIVERSITY RANKING BY QUAKERLY SYMONDS
June 10, 2021
0
Tags