குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய நிபுணர் குழு / EXPERT PANEL TO DETERMINE MINIMUM WAGE
TNPSCSHOUTERSJune 04, 2021
0
குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயிப்பது தொடர்பான தொழில்நுட்ப உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு வகையான தொழிலாளர்களுக்கும் வேறு வேறான குறைந்தபட்ச ஊதியம் உள்ளது. தேசிய தளம் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச ஊதிய அளவைக் குறிக்கிறது.
அறிவிப்புத் தேதியிலிருந்து மூன்று வருட காலத்திற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது ஊதியங்கள் குறித்த சர்வதேச சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து, ஊதியங்களை நிர்ணயிப்பதற்கான ஒரு அறிவியல் அளவுகோல்களையும் முறையையும் உருவாக்கும். அதன்பேரில் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
இந்த நிபுணர் குழுவிற்கு பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அஜித் மிஸ்ரா தலைமை தாங்குகிறார். நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஐ.ஐ.எம் கல்கத்தாவின் பேராசிரியர் தாரிகா சக்ரவர்த்தி, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (என்.சி.ஏ.இ.ஆர்) மூத்த ஆய்வாளர் அனுஷ்ரீ சின்ஹா, இணை செயலாளர் விபா பல்லா, இயக்குநர் ஜெனரல் எச்.சீனிவாஸ், தேசிய தொழிலாளர் நிறுவனம் (வி.வி.ஜி.என்.எல்.ஐ) சார்பில் வி.வி.கிரி ஆகியோர் உள்ளனர்.
நிபுணர் குழுவின் உறுப்பினர் செயலாளராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் மூத்த ஆலோசகர் டி.பி.எஸ்.நேகி செயல்படுவார்.