Type Here to Get Search Results !

2020 - 2021க்கான நிதிஆயோக்கின் மாநிலங்கள் தரவரிசை பட்டியல் / RANKING LIST OF STATES OF 2021 - 2021 BY NITIAYOG

 

  • கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட 17 பிரிவுகளில் நீடித்த நிலையான வளர்ச்சியை பெறும் வகையில் உலக நாடுகள் தங்களின் திட்டங்களை வகுக்க வேண்டும் என 2015ல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 
  • 2030க்குள் இந்த இலக்குகளை அனைத்து நாடுகளும் எட்ட வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் மாநிலங்கள் செயல்பாடுகள் தொடர்பாக நிதிஆயோக் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 
  • இந்த ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி, 2020 - 2021க்கான தரவரிசை பட்டியலை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.
  • வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.
  • அதன்படி 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த செயல்பாடுகளை பொருத்தவரை கேரள மாநிலம் 75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், இமாச்சல் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • இதில் இலக்கு வாரியாக பார்த்தால், வறுமை ஒழிப்பில் 86 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பிரிவுகளில் 66 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், தரமான கல்வி பிரிவில் 69 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், நல்ல குடிநீர் பிரிவில் 87 புள்ளிகளுடன் 13வது இடத்திலும், தூய்மையான எரிசக்தி பிரிவில் 100 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சி பிரிவில் 71 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், தொழிற்சாலை கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்பு பிரிவில் 71 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
  • நிலையான வளர்ச்சி உள்ள நகரங்கள் பிரிவில் 79 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், நுகர்வும் உற்பத்தியும் பிரிவில் 78 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், பருவநிலை மாற்றம் பிரிவில் 61 புள்ளிகளுடன் 11வது இடத்திலும், பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வளர்ச்சி பிரிவில் 11 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், நீடித்த வன மேம்பாடு மற்றும் இயற்கையுடன் சேர்ந்த மேம்பாடு பிரிவில் 63 புள்ளிகளுடன் 17வது இடத்திலும், அமைதியான சூழல் மற்றும் எல்லாருக்கும் பாகுபாடற்ற நீதி கிடைக்க செய்தல் உள்ளிட்ட பிரிவில் 71 புள்ளிகளுடன் 17வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களின் பயன்பாட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுத்தமான குடிநீர் பிரிவுகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது.
  • நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவதால் பல பிர்காக்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகளின் பரப்பளவு 8.2 சதவீதம் குறைந்துள்ளது. 
  • 9 மற்றும் 10ம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 10லிருந்து 13 சதவீமாக உயர்ந்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதார வசதிகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
  • ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், சிக்கிம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை இந்த பட்டியலில் பிடித்திருக்கிறது. 
  • உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் கடைசி இடங்களில் உள்ளது. இதில் பீகார் மாநிலம்தான் மிக மோசமாக வெறும் 52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
  • வறுமை ஒழிப்பை பொருத்தவரை, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுபவையாக உள்ளது. பசியின்மையை பொருத்தவரை கேரளா மற்றும் சந்திரர் மாநிலங்களும் பொது சுகாதாரத்தை பொருத்தவரை குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் சிறப்புடன் செயல்படுவதாக கூறி உள்ளது.
  • பொது சுகாதாரத்தில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த குஜராத், இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது தமிழகத்தை பொருத்தவரை இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
  • கல்வியறிவு சிறப்புடன் செயல்படும் மாநிலங்களாக கேரளா மற்றும் சந்திரன் ஆகியவை உள்ள நிலையில், பாலின சமநிலையை சட்டீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள சிறப்பாக கையாள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. 
  • சுத்தமான குடிநீர் வழங்குவதில் கோவா மற்றும் லக்ஷதீப் சிறப்பாக செயல்படுவதாகவும், சுத்தமான எரிசக்தியை பொருத்தவரை ஆந்திரா - கோவா - ஹரியானா - தமிழ்நாடு - தெலங்கானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியில் இமாச்சல் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சமநிலையின்மையை குறைப்பதில் மேகாலயா மற்றும் சங்கர் மாநிலங்களும் நகரங்களை நிலையாக வைத்திருப்பதில் பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்படுத்த களில் திரிபுரா ஜம்மு-காஷ்மீர் ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒடிசா மற்றும் அந்தமான் ஆகியவை சரியாக செயல்படுவதாகவும் நிதி ஆயோக் அமைப்பு வகைப்படுத்தி உள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel