- நிலையான அபிவிருத்தி இலக்குகளின் இந்தியா (எஸ்டிஜி இந்தியா) மற்றும் டாஷ்போர்டு 2020-21 எடுத்த கணக்கீட்டின் படி ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.
- இந்த குறியீட்டு மதிப்பெண்கள் மாநிலங்களுக்கு 16 முதல் 70 வரையிலும், யூனியன் பிரதேசங்களுக்கு 18 முதல் 77 வரையும் இருக்கும்.
- இந்தியாவில் சிறந்த காலநிலை நடவடிக்கைக்கான குறியீட்டு மதிப்பெண்ணில் ஒடிசா அனைத்து மாநிலத்தையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் 70 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
- இதனை தொடர்ந்து கேரளா (69 மதிப்பெண்கள் ), நாகாலாந்து (69), குஜராத் (67) , மிசோரம் (66), சிக்கிம் (65) ஆகிய மதிப்பெண்களை பெற்று அடுத்த இடத்தை பெறுகின்றன.
- மாநிலங்களை பொறுத்தவரை ஒடிசாவும், யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை அந்தமான் & நிகோபார் தீவுகளும் சிறந்த செயல்முறைகளை கொண்டுள்ளன.
- இந்தியாவில் காலநிலை நடவடிக்கைக்கான செயல்திறனை அளவிட ஐந்து தேசிய அளவிலான கொள்கைகள், செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
- தீவிரமான காலநிலை போன்ற நிகழ்வுகளால் 1 கோடி மக்கள் தொகையில் இழந்த உயிரிழப்பு எண்ணிக்கை.
- பேரழிவு பின்னடைவு குறியீட்டின்படி பேரழிவை எதிர்கொள்ளும் தயாரிப்பு திறன் .
- நிறுவப்பட்ட மொத்த உற்பத்தி திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சதவீதம் ((ஒதுக்கப்பட்ட பங்குகள் உட்பட)
- 1,000 எண்ணிக்கைக்கு ஏற்ப எல்.ஈ.டி பல்புகளிலிருந்து சேமிக்கப்பட்ட கார்பனீராக்சைடு(C02)
- காற்று மாசுபாடு காரணமாக (1,00,000 மக்கள்தொகைக்கு) ஏற்பட்ட இயலாமை சரிசெய்யப்பட்ட ஆயுட்கால வீதம்.
- இதில் தீவிர காலநிலை நிகழ்வுகள் காரணமாக 1 கோடி மக்கள் தொகையில் இழந்த மனித உயிர்களின் எண்ணிக்கை 0 இலக்கை விட ஒடிசாவின் செயல்திறன் 22.78 ஆக உள்ளது.
- பேரழிவு பின்னடைவு குறியீட்டின் படி பேரழிவு தயாரிப்பு மதிப்பெண்ணில் ஒடிசா நிர்ணயிக்கப்பட்ட 50 இலக்குக்கு எதிராக 22 மதிப்பெண்கள் எடுத்துள்ளது.
- நிறுவப்பட்ட மொத்த உற்பத்தி திறனில் (ஒதுக்கப்பட்ட பங்குகள் உட்பட) புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சதவீதத்தில் ஒடிசா நிர்ணயிக்கப்பட்ட 40 இலக்குக்கு எதிராக 31.40 மதிப்பெண் பெற்றுள்ளது.
- 1,000 எண்ணிக்கை கொண்ட எல்.ஈ.டி பல்புகளிலிருந்து சேமிக்கப்பட்ட கார்பனீராக்சைடடில் (C02) ஒடிசா 103.22 இலக்குக்கு எதிராக 120.07 மதிப்பெண் பெற்றுள்ளது.
- மேலும் காற்று மாசுபாடு காரணமாக (1,00,000 மக்கள்தொகைக்கு ஏற்ப) ஏற்பட்ட இயலாமை சரிசெய்யப்பட்ட ஆயுட்கால விகிதத்தில் ஒடிசா 1442 இலக்கை விட 3201 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
- துணை தேசிய அளவில் தரவு கிடைப்பதன் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் ஒப்பீட்டை உறுதி செய்வதன் அடிப்படையில் மேற்கணட குறிகாட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.