Type Here to Get Search Results !

TNPSC 2ndJUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கொரோனா இல்லாத கிராமம் - முதல் பரிசு ரூ.50 லட்சம்: மகாராஷ்டிர அரசு

  • கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சில கிராமங்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பாராட்டி இருந்த நிலையில், தற்போது ''கொரோனா இல்லாத கிராமம்'' என்ற போட்டியை அறிவித்துள்ளார்.
  • இந்தப் போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் 'கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • மாநிலத்தில் ஆறு வருவாய் பிரிவுகள் உள்ளன. எனவே, மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்படும். இதற்கான மொத்த பரிசுத் தொகை 5.4 கோடி மாநில அரசு சார்பில் வழங்கப்படும். 

இஸ்ரேல் புதிய அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு

  • இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, 11-ஆவது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 60 வயதாகும் ஐசக் ஹெர்ஸாக், முன்னாள் அதிபர் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983 முதல் 1993-ஆம் ஆண்டு வரை அவர் இஸ்ரேலின் அதிபராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக மிஸ்ரா பதவியேற்பு

  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக மிஸ்ரா பதவியேற்றார். வழக்கமாக ஜனாதிபதி தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 
  • கொரோனா தொற்று அச்சம் காரணமாக பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மிஸ்ரா, புதிய தலைவர் பொறுப்பை ஏற்றார். இவருடைய பதவி காலம் மூன்று ஆண்டுகள்.

ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் ரகசியங்கள் வெளியிட தடை மத்திய அரசு புதிய சட்டம்

  • உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
  • உளவுத்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்கள் துறை சம்மந்தப்பட்ட விஷயங்களை பொது வெளியில் வெளியிட தடை உள்ளது. 
  • ஆனாலும் பல மூத்த அதிகாரிகள் தங்களின் பணிக்காலத்தில் சந்தித்த சவாலான வழக்குகள், முக்கிய, ரகசிய தகவல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது வழக்கமாக உள்ளது. 
  • இதுபோன்ற தகவல்கள் சில சமயங்களில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. எனவே, இதை தவிர்க்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் ரகசியங்களை அமல்படுத்துவதற்கான தடையை மத்திய அரசு இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.
  • மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) திருத்த விதிகள் 2007ன் படி, 'ஓய்வு பெற்ற ஊழியர்கள் எந்த ஒரு தகவலையும் வெளியிடும் முன்பாக, அந்தந்த துறை தலைவர்களிடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
  • இதில் மத்திய அரசு தற்போது திருத்தம் செய்து, முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்கு அமைப்பின் தலைவரிடம் அவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதி இல்லாமல் தகவலை வெளியிட மாட்டோம் என அனைத்து ஊழியர்களும் அமைப்புத் தலைவருக்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும். 
  • அவர்கள் விதிகளை மீறி வெளியிட்டால், ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம் என்று திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளன. அனுமதியின்றி முக்கிய தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உளவுத்துறை (ஐபி), ரா, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை, விமான ஆராய்ச்சி மையம், எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். 
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், சிறப்பு எல்லை படை, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் நிதி புலனாய்வு பிரிவு ஆகியவையும் அடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel