Type Here to Get Search Results !

TNPSC 6th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் வெற்றிகர சோதனை

  • பிற கிரகங்களுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக அமெரிக்காவின் ஸ்பேஸ்}எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் ராக்கெட்டின் மாதிரி, வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
  • அந்த "ஸ்டார்ஷிப்'பின் 15}ஆவது வரிசை எண் கொண்ட ராக்கெட், டெக்ஸôக் மாகாணம், பிரெளன்ஸ்வில் நகரிலுள்ள நிறுவனத்தின் ஏவுதளத்தில் மேலே செலுத்தப்பட்டு, பிறகு முதல்முறையாக வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
  • இந்த வகையைச் சேர்ந்த ராக்கெட்டைத்தான், தனது 2024}ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நாசா தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சகங்கள் பெயர் மாற்றம்

  • தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், இன்றுள்ள சூழலில், மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. 
  • மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில் வைத்து, சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும், தொலைநோக்குப் பார்வையோடு, மாற்றி அமைக்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • தமிழகத்தின், நீர் தேவையை நிறைவு செய்வதற்காக உண்டாக்கப்படும் தனி அமைச்சகம், 'நீர் வளத்துறை' என்று அழைக்கப்படும். இத்துறை, தமிழகத்தில் தடையின்றி, உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர் நிலைகளை துார் வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், முக்கிய துறையாக செயல்படும். மற்ற துறைகளை ஒருங்கிணைக்கும் மையப் புள்ளியாக, இது இருக்கும்.
  • வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம், 'வேளாண்மை -உழவர் நலத் துறை' என்று, பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம், சாகுபடியை பெருக்குவது மட்டும் அல்ல. உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக, இத்துறை செயல்படும்
  • சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம், 'சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை' என்று மாற்றப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய, சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும், இந்த அமைச்சகம் செயல்படுத்தும்
  • மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது, மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும், அத்துறைக்கு பரந்துபட்ட நோக்கத்தில், 'மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை' என்று, பெயர் சூட்டப்படுகிறது
  • மீனவர்கள் நலமில்லாமல், மீன்வளத்தை பெருக்கி பயனில்லை. எனவே, மீனவர் நல வாழ்விற்கான, திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், 'மீன்வளம் -மீனவர் நலத்துறை' என்று அழைக்கப்படும்
  • தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள், காலப்போக்கில் மாறி, இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை, உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே, 'தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை' என்று பெயரிடப்படுகிறது
  • செய்தி மக்கள் தொடர்புத்துறை, 'செய்தித் துறையாக' உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே, அத்துறையின் செயல்பாடாக, மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது
  • சமூக நலத்துறை என்பது, பெண்களுக்கு உரிமை வழங்குகிறது. பல்வேறு செயல்பாடு களை உள்ளடக்கிய துறை. எனவே, அதை குறிக்கும் பொருட்டும், 'சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை' என்று அழைக்கப்பட உள்ளது
  • பணியாளர் என்கிற பதம், இன்று மேலாண் வட்டத்தில், அவர்களை பாரமாகக் கருதும் போக்கை சுட்டிக்காட்டுவதால், மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, 'மனிதவள மேலாண்மைத் துறை' என்று, அழைக்கப்பட உள்ளது 
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை, 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று பெயர் மாற்றம் அடைகிறது. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை, திட்டங்களாகக் கொண்டு செயல்படத் துாண்டுகோல்களாக இருக்கும்.
மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதியுதவி ஆர்பிஐ
  • கரோனா பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மருத்துவமனைகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தொய்வின்றி கடனுதவி அளிக்கும் வகையில் வங்கிகளுக்கு ரூ.50,000 கோடியை "சிறப்புச் சாளர திட்டத்தின்” கீழ் ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 
  • இந்த கடனுதவித் திட்டம் 2022 மார்ச் 31 வரை அமலில் இருக்கும். அரசு பத்திரம்: அரசு கடன் பத்திரங்களை வாங்கும் (the Government Securities Acquisition Program (G-SAP)) திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி ரூ.35,000 மதிப்புக்கு கடன்பத்திரங்களை வாங்கவுள்ளது. (மே 20-ஆம் தேதி ரூ.35 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel