Type Here to Get Search Results !

TNPSC 5th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

  • மஹாராஷ்டிராவில், 2018ல், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது, மாநிலத்தில், மராத்தா சமூக மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு களில், 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து, மாநிலத்தில் சட்டம் அமலானது.மனு தாக்கல்இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், பலர் மனு தாக்கல் செய்தனர்.
  • இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உறுதி செய்தது. எனினும், 'வேலைவாய்ப்பில், 12 சதவீதம், கல்வியில், 13 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
  • மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்., 9ல், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 
  • எனினும், 'இந்த சட்டத்தால் பயன்பெற்றவர்களுக்கு, எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது' என, தெரிவித்து, வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
  • இதையடுத்து, இந்த வழக்கை, நீதிபதிகள் அசோக் பூஷன், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்த வழக்கில்,  தீர்ப்பு அளிக்கப்பட்டது.
  • ஐந்து நீதிபதிகளும், நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கினர். எனினும், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்பதில், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தனர்.

கடன் மறு சீரமைப்பு செய்ய வசதி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • தனி நபர்கள், சிறு, நடுத்தர தொழில் செய்வோர் தங்களது கடன்களை 2020ம் ஆண்டில் மறு சீரமைப்பு செய்யாமல், கடந்த மார்ச் மாதம் வரை ஸ்டாண்டர்டு அக்கவுண்ட் ஆக வகைப்படுத்தப்பட்டிருந்தால், தங்களது கடன்களை 2 ஆண்டுகள் வரை மறு சீரமைப்பு செய்து கொள்ளலாம். 
  • அதிகபட்சமாக 25 கோடி வரை கடன் வைத்துள்ளவர்கள் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். 
  • அதிக கடன் வழங்க ஊக்குவிக்கும் வகையில், வங்கிகளுக்கு 50,000 கோடி நிதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வினியோகிப்பவர்கள், முன்னுரிமை மருத்துவ கருவி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இது உதவும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டப்படி சுமாா் 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும்.
  • இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி பங்கு விற்பனைக்கு ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஐடிபிஐயின் பங்குகளை விற்பனை செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 
  • அதில், நிகழாண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, ஐடிபிஐயின் பங்குகளை விற்பனை செய்வதற்கும் நிா்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இருப்பதாக, நிகழாண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா். அதன்படி, ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 
  • அந்த வங்கியில் மத்திய அரசும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் (எல்ஐசி) இணைந்து 94 சதவீத பங்குகளை வைத்துள்ளன. அதில், எல்ஐசி மட்டுமே 49.1 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அந்தப் பங்கின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு எல்ஐசி அண்மையில் முடிவு செய்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel