Type Here to Get Search Results !

TNPSC 4th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கீழடியில் மூடியுடன் முழு மண் பானை கண்டுபிடிப்பு

  • கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • இதுவரை அங்கு ஐந்து குழிகள் தோண்டப்பட்டதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள் , பகடை , கல்உழவு கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன . இந்நிலையில் 3 ஆவதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது .
  • இதுவரை சேதம் அடைந்த பானைகளே கிடைத்த நிலையில் தற்போது மூடியுடன் முழு பானை கிடைத்துள்ளது. பானையை உட்புறம் இறுக்கமாக மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • எனவே பானையின் உள்ளே பொருட்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். உள்ளே பொருட்கள் இருக்கும் பட்சத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து தெரிய வர வாய்ப்புள்ளது.

இந்தியாவுடன் பிரிட்டன் ரூ.10,220 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம்

  • பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வழியில் செவ்வாய்க்கிழமை உரையாடினாா். 
  • இந்த காணொலி வழி மாநாட்டின்போது, இந்தியாவுடன் ரூ.10,200 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, பிரிட்டனில் புதிதாக 6,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.
  • பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
  • இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக மதிப்பு தற்போது ஆண்டுக்கு ரூ.2.35 லட்சம் கோடியாக உள்ளது. இதை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தியாவுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது. இதுதவிர விரிவான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தையும் பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் மருத்துவம், உயிரிதொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் சுமாா் 20 இந்திய நிறுவனங்கள் ரூ.5,453 கோடி முதலீடு செய்யவுள்ளன. அதில், சீரம் நிறுவனம் ரூ.2,455 கோடி முதலீடு செய்கிறது. 
  • அந்த நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பிரிட்டனில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யவுள்ளது. பிரிட்டனில் விற்பனை அலுவலகத்தையும் அந்த நிறுவனம் திறக்கவுள்ளது.
  • இதுதவிர, விப்ரோ, கியூ-ரிச் கிரியேஷன்ஸ், மாஸ்டெக், ஸ்டொலைட் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பிரிட்டனில் முதலீடு செய்யவுள்ளன.
  • இதேபோன்று பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், இந்தியாவுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அதன்படி, இந்தியாவுக்கு ரூ.4,563 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. 
  • இதன்மூலம் பிரிட்டனில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்ப அமைப்பை பிரிட்டன் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவுள்ளன. 
  • அந்த வா்த்தகத்தின் மதிப்பு ரூ.2,046 கோடியாகும். இந்த ஒப்பந்ததால், இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எளிதாக முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து, கணிப்பை மாற்றிய கோல்ட்மேன் சாக்ஸ்
  • அமெரிக்காவின் முக்கிய மதிப்பீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் குறையும் என கணித்திருக்கிறது. 
  • நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11.7 சதவீதமாக இருக்கும் என முன்பு கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருந்தது. ஆனால், தற்போது 11.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது.
  • மேலும், யுபிஎஸ் நிறுவனம் 11.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என முன்பு கணித்திருந்தது. ஆனால், இரண்டாம் அலை தீவிரமானதால் நடப்பு நிதி ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என கூறியிருக்கிறது.
  • ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. அதேபோல, உலக வங்கி 10.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது.
  • பெருந்தொற்றுக்கு முன்பு இருந்தே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தது. 2017-ம் நிதி ஆண்டில் 8.3 சதவீத வளர்ச்சி இருந்தது. 
  • அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் 6.8 சதவீதம் மற்றும் 6.5 சதவீதமாக குறைந்தது. 2020-ம் நிதி ஆண்டில் சதவீதமாக இருந்தது. 2021-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் வரை சரியக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel