Type Here to Get Search Results !

TNPSC 2nd MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

3-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கும் மமதா பானர்ஜி

  • மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, இடதுசாரி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. 
  • 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பதற்கு 148 தொகுதிகள் தேவை என்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 
  • மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

கேரளத்தில் வரலாறு படைத்த இடதுசாரி கூட்டணி
  • கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 6-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோதல் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான அணிகள் களம் கண்டன.
  • இருப்பினும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது. கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. 
  • அந்த வரலாற்றை இடதுசாரிகள் கூட்டணி தற்போது மாற்றியுள்ளது. தொடா்ந்து 2-ஆவது முறையாக அக்கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. 
தமிழக சட்டப் பேரவைத் தோதலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி
  • தமிழக சட்டப் பேரவைத் தோதலில் 158 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்க உள்ளாா்; இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.
  • மேலும், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைப் பெற்றுள்ளன.
  • அதிமுக தலைமையிலான கூட்டணி 75-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 65-க்கும் அதிகமான இடங்களை வென்று பிரதான எதிா்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெறுகிறது.
  • தமிழக சட்டப் பேரவைத் தோதலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்பட்டன.
புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி
  • ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81.7 சதவீத வாக்குகள் பதிவாகின. 24 நாட்களுக்குப் பின் 6 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதன் முடிவில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்கள், பாஜக 6 இடங்கள் என ஆட்சியமைக்கத் தேவையான 16 இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்றது.
  • இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேலும், புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
பிரான்ஸ் அரசு அனுப்பிய 28 டன் மருத்துவ கருவிகள் இந்தியா வந்து சேர்ந்தது
  • கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையில், இந்தியாவுக்கு8 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்,5 திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள், 28 செயற்கை சுவாசக் கருவிகள்,200 மின்சார சிரிஞ்ச் பம்புகள், மருந்துகள் ஆகியவை வழங்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
  • ஒரு ஆக்கிஜன் ஜெனரேட்டர் மூலம் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்கலாம் அல்லது அதிகம்பாதிக்கப்பட்ட 15 ஐசியு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம் அல்லது சிறிதளவு ஆக்சிஜன் தேவைப்படும் 150 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அசாமில் பா.ஜ., அமோக வெற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது
  • அசாமின், 126 உறுப்பினர்களை உடைய சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அசாம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன. 
  • காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் முன்னணி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.மகா கூட்டணிஓட்டு எண்ணிக்கை காலை துவங்கியது. துவக்கம் முதலே, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்தது. 
  • தனிப் பெரும்பான்மைக்கு, 64 தொகுதிகள் தேவை என்ற நிலையில், நேற்றிரவு நிலவரப்படி, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 78 தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளன.
  • இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக, அசாமில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கிறது.காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel