பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.8,873 கோடி ஒதுக்கீடு
- மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிக்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் ஒதுக்குவது வழக்கம். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கி உள்ளது.
- இதை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.8,873.6 கோடி விடு விக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் நிவாரண நிதியில் 50 சதவீதத்தை, அதாவது ரூ.4,436.8 கோடியை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.41 லட்சம் கோடி
- கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு மூலம் வசூலான தொகை ரூ.1,41,384 கோடியாகும். இது ஜிஎஸ்டி அமலானதிலிருந்து ஒரு மாதத்தில் வசூலான அதிகபட்ச தொகையாகும்.
- இதில் மத்திய அரசின் சிஜிஎஸ்டிரூ.27,837 கோடி, மாநில அரசுகளின் எஸ்ஜிஎஸ்டி ரூ.35,621 கோடி,ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.68,481 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இறக்குமதி வரி மூலம் வசூலான ரூ.29,599 கோடியும் அடங்கும்.
- செஸ் எனப்படும் வரி மூலம் வசூலானது ரூ.9,445 கோடி. இதில் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.981 கோடி தொகையும் அடங்கும்.
இந்தியாவுக்கு ரூ.75 கோடி நிதியுதவி போயிங்
- கரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள மனித சமூகத்தை பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியா மிக கடினமான காலகட்டத்தை எதிா்கொண்டுள்ளது.
- போயிங் நிறுவனம் ஒரு சா்வதேச குடிமகன் என்கிற நிலையில், தனது பொறுப்பினை உணா்ந்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க உதவும் வகையில் ரூ.75 கோடி நிதியுதவியை போயிங் நிறுவனம் அளிக்கும்.
உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் போர்ச்சுகலில் திறப்பு
- உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு உலகிலேயே மிக நீளமானமானதாக கருதப்படும் தொங்கு நடைப்பாலம் போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.
- போர்ச்சுகல்லில் உள்ள அரோவுகா (Arouca) பகுதியில் பசுமையான இயற்கை சூழலுக்கு மத்தியில், ஆற்றின் குறுக்கே இந்த தொங்கு நடைபாலம் கட்டப்பட்டுள்ளது.
- தரையில் இருந்து 175 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 2.8மில்லியன் டாலர் மதிப்பில், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொங்கு நடைபாலத்தை கட்டிமுடிப்பது கடும் சவாலாக இருந்ததாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் கண்டுபிடிப்பு
- கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 மீட்டர் நீளத்தில் இருக்கும் வளையத்தை, காதில் அணிவதற்காக தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம்.
- இதேபோல் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உழவுக்கருவிகளும், மண்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொந்தகையில் மனித எலும்புக் கூடுகள், இரும்பு வாள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.