சரக்குப் பெட்டகங்களை கையாளுவதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
- ஏற்றுமதி இறக்குமதிக்கான சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் சென்னை துறைமுகம் புதிய சாதனையை படைத்துள்ளது. இக்கப்பலில் வந்த 4,645 இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்களையும், இதே கப்பலில் ஏற்றிச் செல்லவிருந்த 4,174 ஏற்றுமதிக்கான சரக்குப் பெட்டகங்களுடன் மொத்தம் 8,719 பெட்டகங்களை கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையைப் புரிந்துள்ளது.
- இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிச.8-ஆம் தேதி ஏபிஎல் இங்கிலாந்து என்ற கப்பலில் மொத்தமாக 8,397 பெட்டகங்களை கையாண்டது தான் முந்தைய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
ரபார்ட் லெவண்டோவஸ்கி 41 கோல்கள் அடித்து புதிய சாதனை
- ஜெர்மனியின் பண்டெஸ்லிகா கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிக் தொடர்ந்து 9முறையாகவும், மொத்தத்தில் 30வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- கூடவே இந்த தொடரில் பேயர்ன் மியூனிக் வீரர் ரபார்ட் லெவண்டோவஸ்கி (போலாந்து) 41கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
- இதன் மூலம் ஒரே தொடரில் 40 கோல் அடித்து 1972ல் சாதனை படைத்த பேயர்ன் மியூனிக் வீரர் ஜெர்டு முல்லரின்(ஜெர்மனி) 48 ஆண்டுகால சாதனையை ராபர்ட் முறியடித்துள்ளார்.
கரோனாவால் பாதித்தவர்களுக்காக 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கும் பிசிசிஐ
- 'கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நீண்ட காலமாக மருத்துவத் துறையும், சுகாதாரத் துறையும் போரிட்டு வருகிறது. அவர்கள் உண்மையாகவே முன்னணி வீரர்களாக இருந்து நம்மை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார்கள்.
- இந்த தருணத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 10 லிட்டர் திறன் கொண்ட 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்படும்'
- இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
- இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவை சேர்ந்த பனாசியா பயோடெக் நிறுவனம், ரஷ்யாவின் ஆர்டிஐஎப் உடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை தொடங்கி உள்ளது.
- இமாச்சல் பிரதேச மாநிலம், பட்டியில் உள்ள பனேசியா பயோடெக் மையத்தில் முதல் தொகுப்பு உற்பத்தி செய்யப்பட்டு தர ஆய்வுக்காக ரஷ்யாவின் கமாலியா மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
- இதன் முழு அளவிலான தயாரிப்பு கோடை காலத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தபடி, ஆண்டுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.