Type Here to Get Search Results !

TNPSC 23rd MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மெட்ரோ ரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறைகள்

  • கரோனா சிகிச்சைக்கு 2டிஜிமருந்து, ஆக்சிஜன் கருவிகள் என பங்களித்து வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிரிக்கழிவறையை (பயோ டைஜஸ்டர்) சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தது. 
  • இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி 'உயிரி செரிமானி எம்.கே.II' என்ற பெயரில் மேம்பட்ட உயிரிக்கழிவறையை தற்போது உருவாக்கியுள்ளது.
  • மத்திய - மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ), டி.ஆர்.டி.ஓ நிறுவனமும் தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
  • இதன் ஒரு பகுதியாக, புனே மெட்ரோ ரயில் நிலையங்களில் 'உயிரிக் கழிவறைகள்' அமைக்கப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பு கையெழுத்தானது. 
  • மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஆர்டிஓ நிறுவனத்தின் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 2.40 லட்சம் உயிரிக் கழிவறைகளை ரயில்பெட்டிகளில் இந்திய ரயில்வே ஏற்கனவே நிறுவியுள்ளது.
  • பனிமலையில் பணியாற்றும்ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தொழில்நுட்பம். காற்றில்லா பாக்டீரியா (Anaerobic Bacteria) தொகுதி தான் இதன் சூட்சுமம். இந்த பாக்டீரியா மனிதக்கழிவை நீர், மீத்தேன், கார்பன் டை ஆக்சைட் எனப் பிரிக்கிறது. 
  • வெளிவரும் நீர் தெளிவானது, வாசனையற்றது, தோட்டத்திற்கும், உபகரணங்களை கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, பசுமை தொழில்நுட்பமான உயிரிக்கழிவறை இடத்தையும், தண்ணீரையும் சேமிக்கிறது. செலவும் அதிகமில்லை.

170 டன் மருந்து பொருட்கள் கூடுதலாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு - உலக சுகாதார அமைப்பு

  • உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கரோனா வைரஸின் 2-ம் அலை தீவிரமாக உள்ளது. நாட்டில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருந்து மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகளை அனுப்பி வருகின்றன.
  • இதனிடையே இந்தியாவுக்கு கூடுதலாக 170 மெட்ரிக் டன்மருந்துகள், மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த கேரளப் பெண்ணுக்கு இஸ்ரேல் நாட்டின் கௌரவ குடியுரிமை
  • இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த செளமியா சந்தோஷூக்கு இஸ்ரேல் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
  • முன்னதாக, காஸா எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இஸ்ரேலின் அஸ்கேலான் நகரில் வயதான பெண்மணி ஒருவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்பவர் ஏற்றிருந்தார்.
லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
  • 20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் மாட்ரிட் அணி வென்றது. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
  • லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது.
மின்னணு நீதிமன்ற சேவை செயலிக்கான கையேடு
  • மின்னணு நீதிமன்ற சேவைகள் வழங்கும் செயலியை உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்தச் செயலியை இதுவரை 57 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இலவசமாக பதிவிறக்கம் செய்துள்ளனா்.
  • இந்தச் செயலியை பயன்படுத்தும் முறைகளை விளக்கும் கையேடு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்காளி, குஜராத்தி, காசி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி ஆகிய 14 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கையேட்டின் அணிந்துரையை உச்சநீதிமன்ற நீதிபதியும், மின்னணுக் குழுவின் தலைவருமான டி.ஒய்.சந்திரசூட் எழுதியுள்ளாா்.
கோ-வின் வலைதளம் - 14 மாநில மொழிகளில் செயல்படவுள்ளது
  • கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்வதற்கான "கோ-வின்” வலைதளம் ஹிந்தி மற்றும் 14 மாநில மொழிகளில் செயல்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • மேலும், கரோனா உருமாற்றத்தைக் கண்காணிக்க "இந்திய சார்ஸ்-கரோனா மரபியல் கூட்டமைப்பில் (Indian SARS-CoV-2 Genome Sequencing Consortium (INSACOG)" புதிதாக 17 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குதிரையேற்றம் - ஒலிம்பிக் தகுதி தேர்வு 
  • “ஈக்வெஸ்ட்ரியன்" (Equestrian) எனப்படும் குதிரையேற்றப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார் ஃபுவாத் மிர்சா 2000-ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் "இம்தியாஸ் அனீஸும்”, 1996' அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறைந்த விங் கமாண்டர் (Fouaad Mirza). 
  • "லம்பாவும்" முன்னதாகப் பங்கேற்றிருந்தனர். ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் கலந்துகொண்ட இரண்டு இந்திய ஜாக்கிகள் இவர்கள் மட்டுமே. தற்போது பெங்களூருவைச் சேர்ந்த ஃ புவாத் மிர்சா தேர்வாகியிருக்கிறார். ஃபுவாத், 2018-ல் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்
  • "வெள்ளிப் பதக்கம்" வென்றார். இதன்மூலம் 36 ஆண்டு கழித்து ஆசிய குதிரையேற்றப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியரானார். இதேபோல 2019-ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியிலும் "தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஃபுவாத் தகுதிபெற்றார்.
  • இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் பங்கேற்கும் முதல் ஆசியர் என்கிற சிறப்பை பெற்றிருக்கிறார் புவாத்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel