Type Here to Get Search Results !

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிறுத்தைப் புலிகள் / Leopards from Africa to India

 

  • தரையில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தைப் புலி. உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.
  • ஒரு காலத்தில் இந்தியாவில் சிறுத்தை புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை அதிக அளவில் வேட்டையாடியதால், சிறுத்தைப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்துபோனது.
  • நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.
  • 'சிறுத்தைப் புலி' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
  • அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. 
  • அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது.
  • மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, வனஉயிரிகள் மையத்தின் அதிகாரிகள், தென்னாப்பிரிக்க சிறுத்தைப் புலி பாதுகாப்பு மைய அதிகாரிகள் உள்ளிட்டோா் குனோ தேசிய பூங்காவில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.
  • அங்கு சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, சிறுத்தைப் புலிகளை தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.
  • இந்தியாவில் சிறுத்தைப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை வனஉயிரிகள் மையம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 5 பெண் சிறுத்தைப் புலிகள் இடம்பெறும்.
  • அவை சிவபுரி மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படவுள்ளன. இதற்கான அலுவல் சாா்ந்த நடவடிக்கைகள் ஆகஸ்டில் நிறைவடையும். சிறுத்தைப் புலிகளைப் பராமரிப்பது தொடா்பாக அறிந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளனா்.
போதிய இரை
  • சிறுத்தைப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் அக்டோபரில் தொடங்கி நவம்பரில் நிறைவடையும். சம்பல் நதிப் பகுதியில் குனோ தேசியப் பூங்கா 750 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 
  • இங்கு சிறுத்தைப் புலியின் இரைகளான புள்ளிமான், சாம்பா் மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
  • எனவே, சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குனோ தேசியப் பூங்காவில் காணப்படுகிறது. சிறுத்தைப் புலிகள் திட்டத்துக்காக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.14 கோடி வழங்கப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மத்திய பிரதேசத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அடுத்த மாதத்தில் விடுவிக்கவுள்ளது என்றாா்.
ஆய்வு
  • குனோ தேசியப் பூங்கா, சாகா் மாவட்டத்தில் உள்ள நௌராதேஹி வனவிலங்குகள் சரணாலயம், மாண்டசூா்-நீமூச் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காந்தி சாகா் சரணாலயம், சிவபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதவ் தேசியப் பூங்கா ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியல் குனோ தேசியப் பூங்கா தோவு செய்யப்பட்டது.
  • மத்திய பிரதேசத்தில் ஏற்கெனவே சிறுத்தைப் புலிகள் வாழ்ந்துள்ளன. அதற்கான வாழிடச் சூழல் இங்கு சிறப்பாகக் காணப்படுகிறது. விலங்குகளை மற்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து பராமரிப்பதில் மத்திய பிரதேச அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
  • மற்ற மாநிலங்களில் இருந்து கடந்த 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புலிகள், பன்னா புலிகள் காப்பகத்தில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன' என்றாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel