செவ்வாயின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியைத் தொடங்கியது சீன ரோவா்
- செவ்வாய் கிரகத்துக்கு 'தியான்வென்-1' என்ற விண்கலத்தை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி அனுப்பியது.
- அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டா் பகுதி செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் கடந்த 15-ஆம் தேதி வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலம் தொடா்ந்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய லேண்டா் பகுதியில் ரோவரும் பொருத்தப்பட்டிருந்தது.
- 'ஜூரோங்' எனப் பெயரிடப்பட்ட அந்த ரோவா், லேண்டா் பகுதியில் இருந்து வெளியேறி சனிக்கிழமை செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியை அடைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட அந்த ரோவா், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் முப்பரிமாணப் படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
- கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதோடு நிலப் பகுதிக்கு அடியில் உள்ள அமைப்பு, செவ்வாயின் காந்தப்புலம், நீா், பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்கள், நில அமைப்பு உள்ளிட்டவை குறித்து ஜூரோங் ரோவா் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அதிநவீன திறன் கொண்ட புகைப்படக் கருவிகள், நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்யும் ரேடாா் கருவி, நிலப்பரப்பை ஆராயும் கருவி, காந்தப்புல ஆய்வுக் கருவி உள்ளிட்ட கருவிகள் அந்த ரோவரில் இடம்பெற்றுள்ளன.
- 41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு
- ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலானது, நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் என்ற பெருமையைக் கொண்டதாகும். முந்தைய சோவியத் ரஷ்யாவால் ராஜ்புத் போர்க்கப்பல் கட்டப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- நெடுந்தூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, நீருக்குள்ளேயே சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், விமானத்தை தாங்கி திற்கும் திறன், குண்டு மழையே பொழிந்தாலும் தாங்கிக் கொள்ளும் வசதி என பல்வேறு அதி திறன்களை இந்தக் கப்பல் கொண்டுள்ளது. முதன் முறையாக பிரம்மோஸ் ஏவுகணை இந்த போர்க்கப்பலில் இணைக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- இந்நிலையில் இந்த கப்பலை, கடற்படையிலிருந்து விடுவிப்பதாக நேற்று முன்தினம் இந்திய கடற்படை அறிவித்தது. இதற்கான விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்தில் எளிமையாக நடைபெற்றது.
- ரஷ்யாவின் கஷின் ரகத்தைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல் கடந்த1980-ம் ஆண்டு மே 4-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை அப்போதைய ரஷ்யாவுக்கான இந்திய தூதராக செயல்பட்ட ஐ.கே.குஜ்ரால் கடற்படையில் இணைத்தார்.
- இந்திய அமைதிப் பணிப் படை (ஐபிகேஎஃப்), ஆபரேஷன் காக்டஸ் (மாலத்தீவில் இருந்த பிணையக் கைதிகளை மீட்பதற்காக நடைபெற்ற ஆபரேஷன்), ஆபரேஷன் கிரவுஸ்நெஸ்ட் போன்ற மிக முக்கியமான மிஷன்களில் ஐஎன்எஸ் ராஜ்புத் திறம்பட செயலாற்றியுள்ளது. மேலும் பல்வேறு பேரிடர் மீட்புப் பணிகளிலும் இது சிறப்பாக பணியாற்றியுள்ளது.
நேபாள நாடாளுமன்றம் மீண்டும் கலைப்பு
- ஆட்சி அமைக்க பிரதமா் சா்மா ஓலியும், எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ பகதூா் தாபாவும் ஒரே நேரத்தில் உரிமை கோரிய நிலையில் அதிபா் இந்த முடிவை எடுத்தாா்.
- வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிரதமா் சா்மா ஓலி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கப்பட்டது.
- இதையடுத்து, அரசியல் சாசன சட்டப் பிரிவு 76(7)-இன் படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், புதிதாக தோதல் நடத்தப்படும் எனவும் அதிபா் அறிவித்தாா்.
வெளிநாட்டு உதவி மூலம் மாநிலங்களுக்கு 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள் - மத்திய அரசு
- வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக திட்டமிட்டு விரைந்து விநியோகிக்கும் பணியை பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றன.
- அதன் மூலம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த ஏப்ரல் 27 முதல் மே மாதம் 21-ஆம் தேதி வரை 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,901 ஆக்சிஜன் உருளைகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 11,416 சுவாசக் கருவிகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.