- மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக ஆறு மாத கால, சமுதாய அடிப்படையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அரசு தொடங்கியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் தாவர்சந்த் கெலோட் காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார்.
- குறைபாடுகள் உள்ள நபர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஊனமுற்றோர் உரிமை சட்டம் 2016-ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.
- தற்போது தொடங்கப்பட்டுள்ள புதுமையான திட்டத்தின் கீழ், பாதிப்புறக்கூடியவர்களை அடையாளம் காணும் பயிற்சி மிக்க நபர்கள் உருவாக்கப்பட்டு, அருகில் உள்ள மையங்கள் குறித்து பெற்றோர்கள்/ காப்பாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத் திட்டங்களின் பலன்களை அடைவதற்கு அவர்களுக்கு வழி காட்டப்படும்.
- பயிற்சித் திட்டத்தின் ஆறு புத்தகங்கள் இந்த விழாவின்போது வெளியிடப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும் அவர்களை சமுதாயத்துடன் இணைப்பதிலும் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இணைந்து பணியாற்ற கூடிய அடிமட்ட அளவு மறுவாழ்வு பணியாளர்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுக்கிடையே மாற்று திறனாளிகள் துறையில் ஒத்துழைப்புக்காக 2018 நவம்பர் 22 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மறுவாழ்வுக் குழு மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தால் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மறுவாழ்வுக் குழுவின் கீழ் இயங்கும் மறுவாழ்வு தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும்.
மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்காக புதுமை திட்டம் / CBID Program on Rehabilitation of Divyangjan
May 26, 2021
0
Tags