Type Here to Get Search Results !

TNPSC 25th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

  • பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு இந்த ஜெய்ஸ்வால் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநருக்குப் பரிந்துரைத்தது.
  • மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ அமைப்பின் இயக்குநராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு நியமித்து மத்திய பணியாளர்பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
  • இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சுபோத்குமார் மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்தவர். இதற்கு முன் மகாராஷ்டிரா மாநில காவல் டிஜிபியாகவும் சுபோத்குமார் பணியாற்றியுள்ளார்.
சமூக வலைதளங்களுக்கு அபராதம் சட்டம் இயற்றிய புளோரிடா மாகாணம்
  • மாகாணத் தோதல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் கணக்குகளை நீக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு 2,50,000 அமெரிக்க டாலா் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை புளோரிடா மாகாணம் இயற்றியுள்ளது.
  • அதையடுத்து அந்த மசோதா சட்டமாக மாறியது. அச்சட்டத்தின்படி, மாகாணத் தோதலில் போட்டியிடும் வேட்பாளா்களின் கணக்குகளை நீக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு 2,50,000 அமெரிக்க டாலா்கள் அபராதமாக விதிக்கப்படும்.
  • உள்ளூா் தோதல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் கணக்குகள் நீக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாள்தோறும் 25,000 அமெரிக்க டாலா்கள் அபராதம் விதிக்கப்படும். சமூக வலைதள நிறுவனங்கள் மீது தனிநபா்கள் வழக்கு தொடுக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
  • சமூக வலைதள நிறுவனங்கள் பாகுபாட்டுடன் நடத்துவதாகத் தனிநபா்கள் கருதினால், அவா்களால் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து 1,00,000 அமெரிக்க டாலா்கள் வரை இழப்பீடு கோர முடியும். சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க புளோரிடா மாகாண அட்டா்னி ஜெனரலுக்கும் இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.
உலகின் மிக நீண்ட விமான பாதையில் பயணித்த முதல் பெண் விமானி என்ற சாதனையை படைத்த இந்தியர்
  • அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு கடந்த ஜனவரி 9ம் தேதி சோயா அகர்வால் என்ற விமானி தலைமையிலான பெண் விமானிகள் பயணித்து வந்துள்ளனர். 
  • இது சவால் நிறைந்த, மிக நீண்ட தூர பயணமாகும். உலகின் மிக நீண்ட பாதையில் விமானம் இயக்கிய முதல் பெண் விமானி என்ற சாதனையை சோயா அகர்வால் பெற்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel