Type Here to Get Search Results !

TNPSC 17th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மெக்ஸிகோவை சோந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தோவு

  • கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இப்போட்டி கரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஹாலிவுட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை எளிமையாக நடத்தப்பட்டது.
  • இப்போட்டியில் மெக்ஸிகோவின் 26 வயது ஆண்ட்ரியா மெசா பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ாகவும், அவருக்கு கடந்த ஆண்டு வெற்றியாளரான தென் ஆப்பிரிக்காவின் ஷோஸிபினி துன்ஷி மகுடத்தைச் சூட்டியதாகவும் மிஸ் யுனிவா்ஸின் அதிகாரபூா்வ வலைதளம் தெரிவித்துள்ளது.
  • இப்போட்டியில் பிரேசிலை சோந்த ஜூலியா காமா (28) இரண்டாவது இடத்தையும், பெரு நாட்டைச் சோந்த ஜானிக் மசீட்டா (27) மூன்றாவது இடத்தையும் பெற்றனா். 'மிஸ் இந்தியா' அட்லீன் காஸ்டெலினோ (22) நான்காவது இடத்தைப் பிடித்தாா்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் 10வது முறையாக நடால் சாம்பியன்

  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 
  • மகளிர் பிரிவில் 19 வயது போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டார். 
  • ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் நடால், ஜோகோவிச் தலா 36 சாம்பியன் பட்டங்களுடன் சமநிலை வகிக்கின்றனர். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 28 ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது பார்சிலோனா

  • ஸ்வீடனின் கோதென்பர்க் நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் செல்சீ அணியுடன் மோதிய பார்சிலோனா மகளிர் அணி, தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 
  • ஆட்ட நேர முடிவில், பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. 
  • இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் மகளிர் அணி என்ற பெருமையையும் வசப்படுத்தியது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கிளப் என்ற சாதனையும் பார்சிலோனாவுக்கு கிடைத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான 2டிஜி தடுப்பு மருந்து அறிமுகம்

  • ஆக்சிஜனை நம்பியிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய, 2டிஜி எனும் புதிய தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இதை குளுக்கோஸ் போன்ற தண்ணீரில் கலந்து குடிக்கலாம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2 டியாக்ஸி-டி-குளுக்கோஸ் (2டிஜி) எனும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. 
  • தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான இந்த மருந்து, மருந்துவ பரிசோதனையில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • குறிப்பாக ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்து தரப்பட்டதும், அவர்கள் விரைவில் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 
  • இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் முறைப்படி 2டிஜி மருந்தை அறிமுகம் செய்தனர். 

புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது

  • இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த "கல்விக் கொள்கை-2020" -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.
  • தேசிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது. 2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
  • இதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து, நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
  • தமிழக அரசு எழுதிய இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் வழங்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. 

கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

  • தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. 
  • இந்த வசதி, தமிழ்நாடு, உ.பி., ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தெலுங்கானாவில், இந்த வசதி ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
  • இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். தேவையுள்ள அனைத்து பெரியவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் கூறியுள்ளது. 
  • இந்த எல்டர் லைன், டாடா டிரஸ்ட் மற்றும் என்எஸ்இ அறக்கட்டளையின் உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதியன்று இந்த எல்டர்லைன் உதவி எண் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு வளர்ச்சி 9% க்கு கீழே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல்

  • கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 9 சதவீதத்துக்குள் இருக்கும் என கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 
  • பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், இதன் பாதிப்பு பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
புதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம் 
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து கடந்த 1990 ஏப்ரல் 24ஆம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை (Hubble Space Telescope) விண்ணில் நிலைநிறுத்தின. 
  • தற்போது, பூமியில் இருந்து 130 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய விண்மீன் கூட்டத்தை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. 
  • சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டம் மட்டுமே இருக்கிறது என்று விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது பால்வெளி அண்டத்தை தாண்டி ஏராளமான விண்மீன் கூட்டங்கள் நவீன தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • நாசாவின் ப்பிள்" தொலைநோக்கி, "ஏபெல்3827" (Abell 3827) என்ற மிகப்பெரிய விண்மீன் கூட்டத்தை படம் பிடித்திருக்கிறது. பிரபஞ்ச விண்மீன் கூட்டங்கள் குறித்த விரிவான ஆய்வுக்கு ஹப்பிளின் புகைப்படம் பேருதவியாக இருக்கும். 
2020ல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் ரூ.6 லட்சம் கோடி 
  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் 2020-ஆம் ஆண்டில் சுமார் ரூ.6.13 லட்சம் கோடியை (83.3 பில்லியன் அமெரிக்க டாலர்) தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் குறைவாகும். இந்தப் பட்டியலில் இந்திய முதலிடத்தில் உள்ளது.
  • அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு 59.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel