Type Here to Get Search Results !

TNPSC 16th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கிராமப் பகுதிகளில் கரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய வழிகாட்டுதல்

  • கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் பின்பற்றப்பட வேண்டி கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கான புதிய வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டது.
  • நகா்புறங்களைத் தொடா்ந்து, அதனை ஒட்டிய பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருவதைத் தொடா்ந்து, இந்த புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
  • ஒவ்வொரு கிராமத்திலும் ஆஷா பணியாளா்களைக் கொண்டு கிராம சுகாதார தூய்மை மற்றும் ஊட்டச் சத்து குழுவின் (விஹெச்எஸ்என்சி) உதவியுடன், காய்ச்சல் பாதிப்பு மற்றும் தீவிர சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
  • அனைத்து பொது சுகாதார மையங்கள், துணை மையங்கள் அல்லது சுகாதார நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் விரைவுப் பரிசோதனை (ஆா்ஏடி) உபகரணம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • கரோனா சிகிச்சைக்குத் தேவையான பிற மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். சமூக சுாகதார அதிகாரிகள் (சிஹெச்ஓ) மற்றும் செவிலியா்களுக்கு (ஏஎன்எம்) விரைவு பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  • கரோனா நல மையங்களில் (சிசிசி) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபா்களை மட்டுமின்றி சந்தேகத்துக்குரிய நபா்களையும் அனுமதிக்கலாம். ஆனால், அவா்கள் இருவரையும் தனித் தனி இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதோடு, அவா்கள் இருவருக்கும் தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறுதல் வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயரும்போது, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட வழிகாட்டுதலின்படி, பரவல் தொடா்பை கண்டறிவதற்கான ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்படுவா்களில் 80 முதல் 85 சதவீதம் போ அறிகுறிகள் இல்லாமலும், லேசான அறிகுறிகளுடனும் பாதிக்கப்படுகின்றனா். இதுபோன்ற நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. அவா்களை வீட்டு தனிப்படுத்தலில் அல்லது கரோனா நல மையங்களில் தனிமைப்படுத்தலில் வைக்கலாம்.
  • அதுபோல, அனைத்து கரோனா நோயாளிகளிடமும் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது மிக முக்கியம். அதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான அளவில் பல்ஸ் ஆக்ஸிமீட்டா்கள் மற்றும் வெப்பமானிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • முன்களப் பணியாளா்கள் அல்லது தன்னாா்வலா்கள் மூலம் தனிப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளைக் கண்காணிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கு பாராசெட்டமால் 500 மில்லி கிராம், இவொமெக்டின் மாத்திரை, இருமல் டானிக், விட்டமின் மாத்திரைகள், கடைப்படிக்கவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அடங்கிய விளக்க குறிப்பு, மருந்துகளை எடுப்பதற்கான விவரம், அவசர உதவிக்கு தொடா்பு கொள்வதற்கான விவரங்கள் ஆகியவை அடங்கிய மருந்து தொகுப்பு கொடுக்கப்பட வேண்டும்.
  • கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோன்று மூன்றடுக்கு மருத்துவ உள்கட்டமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதாவது, அறிகுறிகள் இன்றி பாதிக்கப்படுபவா்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவா்களை கரோனா நல மையங்களில் (சிசிசி) வைத்து பராமரிக்க வேண்டும். 
  • மிதமான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவா்களை கரோனா சுகாதார மையங்களில் (டிசிஹெச்சி) வைத்துப் பராமறிக்கவேண்டும். தீவிர பாதிப்பு உடையவா்களை கரோனா மருத்துவமனைகளில் (டிசிஹெச்) வைத்து பராமரிக்க வேண்டும்.
  • மேலும், பாதிப்பு தீவிரமடையும் நோயாளிகளை உடனடியாக மேல் சிகிச்சைக்கு மாற்றும் வகையில், கரோனா நல மையங்கள் (சிசிசி) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழுமையான வசதிகள் அடங்கிய கரோனா சுகாதார மையங்கள் மற்றும் ஒரு கரோனா மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 
  • அதோடு, அடிப்படை உயிா் காக்கும் கருவிகளுடன் கூடிய 24 மணி நேரமும் போதுமான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் கரோனா நல மையங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் தலைமையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - 13 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் குழு 

  • கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டம் கடந்த 13-ஆம் தேதி நடந்தது. நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, முதல்வா் தலைமையில் பேரவைக் கட்சிகளைச் சோந்த உறுப்பினா்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கலாம் என அதில் தீா்மானிக்கப்பட்டது. 
  • இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 13 கட்சிகளைச் சோந்த உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். 
  • நா.எழிலன் (திமுக), சி.விஜயபாஸ்கா் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பூவை ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்).
  • இந்த ஆலோசனைக் குழுவானது அவசரம் அவசியம் கருதி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இந்தக் குழுவுக்கு பொதுத் துறை செயலாளா் டி.ஜெகந்நாதன், உறுப்பினா் செயலாளராக இருப்பாா்.

இணைய வசதி பெற்ற 6000வது ரயில் நிலையம்

  • இந்திய ரயில்வே நிர்வாகம் நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் பயணியருக்காக 'வை - பை' எனப்படும் இணைய வசதி சேவைகளை இலவசமாக வழங்கும் பணிகளில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது. 
  • முதன் முதலில் 2016ம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.மேற்கு வங்கத்தின் மித்னாபூரில் உள்ள ரயில் நிலையம் இந்த இலவச இணைய வசதி பெற்ற 5000வது ரயில் நிலையமானது. 
  • இந்நிலையில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள ரயில் நிலையம் இந்த இணைய வசதி பெற்றுள்ள 6000வது ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மின் அமைச்சக பொது துறை நிறுவனங்கள் ரூ.925 கோடி நிதியுதவி

  • கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மின் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் பிரதமர் நல நிதிக்கு ரூ.925 கோடி வழங்கியுள்ளன.
  • டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் 11 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு தேசிய அனல் மின் நிறுவனம்(என்டிபிசி) ஆர்டர் கொடுத்துள்ளது. 
  • மேலும், சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் வசதியுடன் 2 ஆலைகள் அமைக்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநிலங்களின் மற்ற பகுதிகளிலும் 8 ஆக்சிஜன் ஆலைகளை இந்நிறுவனம் அமைக்கிறது.
  • அதோடு, பெறுநிறுவன சமூக கடமை திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ், பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
  • இதேபோல், மின் அமைச்சகத்தின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி, சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ், புனேவில் உள்ள தால்வி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.2.21 கோடி நிதி அளித்துள்ளது. 
  • இதே போல் பிதோராகர், உத்தராகண்ட், ககாரியா, சத்ரா, சம்பா, பரண், மலப்புரம் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கவும் ஆர்இசி நிறுவனம் நிதி உதவி அளித்து வருகிறது.
  • இந்திய மின் பகிர்வு நிறுவனம் (பிஜிசிஐஎல்), சிஎஸ்ஆர் நிதி மூலம், ராஜஸ்தானின் ஜைசல்மர், ஹரியாணாவின் குருகிராம் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கின்றன.
எப்.ஏ கோப்பை கால்பந்து லீசெஸ்டர் சிட்டி சாம்பியன்
  • இங்கிலாந்தில் நடைபெற்ற எப்.ஏ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீசெஸ்டர் சிட்டி அணி முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது. 
  • லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான பைனலில் செல்ஸீ அணியுடன் மோதிய லீசெஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் யூரி டியல்மான்ஸ் 63வது நிமிடத்தில் வெற்றி கோல் போட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel