Type Here to Get Search Results !

TNPSC 15th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிமேகோ நிறுவனம், 2020ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்
  • 'சிமேகோ' நிறுவனம், 2020ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இப்பட்டியல், நிறுவனங்களின் கல்வி ஆராய்ச்சி வெளியீடு, புதுமையான கண்டுபிடிப்புகளின் வெளியீடுகள், பகுப்பாயும் தன்மை மற்றும் சமூக தாக்கம் போன்ற குறியீடுகள் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. 
  • இதில், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய அளவில் உள்ள தனியார் பல்கலைகளில், முதல் இடத்தை பெற்றுள்ளது. தேசிய அளவில் உள்ள, 10 பல்கலைகளின் பட்டியலில் இடம் பெற்ற, ஒரே தனியார் பல்கலை, இது மட்டும் தான்.
  • ஆராய்ச்சியில், நாட்டில் உள்ள மற்ற பல்கலைகளை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை பெற்றுள்ளதுடன், சர்வதேச அளவில் தலைசிறந்த, 300 பல்கலை களுள், நம் நாட்டில் இருந்து இடம் பெற்ற, ஒரே நிறுவனமாகவும், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
  • தவிர, பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வானியல் ஆகிய தலைசிறந்த நான்கு பாடங்களுக்கான தரவரிசையில், தலைசிறந்த பல்கலையாகவும் உள்ளது.

கரோனா நிவாரணம் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கினாா் ஆளுநா்

  • கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ளவும், மனித உயிா்களைக் காத்திடவும் தமிழக அரசு விரிவான நடவடிக்கைகளையும், தடுப்புப் பணிகளையும் எடுத்து வருகிறது. 
  • இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசின் பொறுப்புகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியும், ஒரு மாத ஊதியத்தையும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அளித்தாா்.

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிவாரணம் தில்லி அமைச்சரவை ஒப்புதல்

  • தில்லியில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிவாரண உதவி அளிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
  • ஒரு முறை அளிக்கப்படும் இந்த நிவாரணத் தொகை பதிவு பெற்ற ஆட்டோ, டாக்ஸி, கிராமின்சேவா, பட்பட், மேக்ஸிகேப், இ-ரிக்க்ஷா, பள்ளிகளுக்கு சவாரி செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்படும்.
  • கடந்த 2020-ஆம் ஆண்டில் இதேபோல தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ரூ.78 கோடி நிவாரண உதவி அளித்தது. இதன் மூலம் 1.56 லட்சம் ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநா்கள் பயன்பெற்றனா். கடந்த ஆண்டு நிவாரண உதவி பெற்றவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய சீன விண்கலம்

  • ஜுரோங் என்ற அந்த ரோவருடன் தியான்வென்-1 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. 
  • இந்த நிலையில், விண்கலத்திலிருந்து பிரிந்த ஆய்வு வாகனம் பெய்ஜிங் நேரப்படி காலை 7.18 மணிக்கு பரந்த நிலப்பரப்பான 'உடோபியா பிளானிடியா' என்ற பகுதியில் தரையிறங்கியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
  • ஜுரோங் ரோவரின் சோலாா் பேனல்களும், ஆண்டெனாவும் விரிவடைய 17 நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு 32 கோடி கி.மீ. தொலைவில் புவியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்பியது. 
  • சுரோங் ரோவா் நகா்ந்து ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் முன்னா், கிரகத்தின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். சீன நெருப்புக் கடவுளான 'ஜுரோங்' பெயரிலான இந்த ரோவா் உயா் தெளிவுத் திறன் கொண்ட நிலப்பரப்பு கேமரா உள்ளிட்ட 6 அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது. 
  • செவ்வாய் கிரக தரைப்பரப்பின் மண் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஜுரோங், தரைப்பரப்பில் தண்ணீா் உள்ளதா, அங்கு முன்னா் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.
  • ஜுரோங் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதையொட்டி விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கிய 2-ஆவது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றுள்ளது.
  • 5 டன் எடை கொண்ட தியான்வென்-1 விண்கலம், கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த 3-ஆவது விண்கலமாகும். அமெரிக்காவின் பொசிவரன்ஸ் விண்கலம் பிப்.18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. 
  • தியான்வென் விண்கல ரோவா் தரையிறங்கிய பகுதியான உடோபியா பிளானிடியா என்ற இடத்திலிருந்து ஜெசேரோ பள்ளத்தாக்கு 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • பிப்ரவரியில் செவ்வாயை சென்றடைந்த மற்றொரு விண்கலம் ஹோப். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்காவிட்டாலும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து, அதன் வளிமண்டலம் மற்றும் காலநிலை குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாகத் தரையிறங்கிய விண்கலம் அமெரிக்காவின் வைகிங்-1 ஆகும். வைக்கிங்-1 விண்கலம் 1976-ஆம் ஆண்டு ஜூலையிலும், வைக்கிங்-2 விண்கலம் அதே ஆண்டு செப்டம்பரிலும் வெற்றிகரமாகத் தரையிறங்கின. 
  • 1971-இல் அப்போதைய சோவியத் யூனியனின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கினாலும், அதன் தகவல்தொடா்பு சில விநாடிகளில் துண்டிக்கப்பட்டது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது
  • அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 
  • குஜராத்தில் இருந்து 730 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. 12 மணிநேரத்திற்குள் இது, புயல் வலுப்பெற்று, நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. 
  • புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டவ் தே புயல் வரும் செவ்வாயன்று குஜராத்தில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழக உளவுத் துறையில் முதன்முறையாக பெண் அதிகாரி 
  • தமிழக உளவுத் துறை ஏடிஜிபி-யாக (Additional Director General of Police (ADGP)) டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் டிஐஜி-யாக (Deputy Inspector General of Police (DIG)) ஆசியம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையில் முக்கியப் பிரிவான உளவுத் துறையில் டிஐஜி அந்தஸ்தில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 
ரோப் கார் திட்டத்துக்கு நிலம் 
  • உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனுக்கும், சுற்றுலாத் தலமான முசௌரிக்கும் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரோப் கார் வழித்தடம் ('Aerial Passenger Ropeway System') உருவாக்கப்படவுள்ளது.
  • இந்தத் திட்டத்துக்காக, இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (Indo-Tibetam Border Police (ITBP)) சொந்தமான 1,500 சதுர மீட்டர் நிலத்தை உத்தரகண்ட் அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 35 கி.மீ. தொலைவுக்கு ரூ.285 அளித்துள்ளது. டேராடூன்-முசௌரி இடையே கோடியில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 
பட்டய கணக்குத் துறையில் இந்தியா-கத்தார் இடையே ஒப்பந்தம் 
  • இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்துக்கும் (Institute of Chartered Accountants of India (ICAI)), கத்தார் நிதி ஆணையத்துக்கும் (Qatar Financial Centre Authority (QFCA)) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய பட்டய கணக்காளர்கள், கத்தாரில் சேவைகள், வரி விதிப்பு, ஆலோசனை, கணக்குத் தணிக்கை ஆகிய நிதிச் பிரிவுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சரிவு
  • சீனா, 7-வது மக்கள்தொகை கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்நாட்டின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி விகிதத்தைப் பெற்று 141 கோடியாக உயர்ந்தது. 
  • 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.38 சதவீதம் அல்லது 7.2 கோடி அதிகமாகும். இந்த எண்ணிக்கையில் ஹாங்காஹ், மகாவ் சேர்க்கப்படவில்லை. ஆகிய பிராந்தியங்கள்
  • சீனா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதம் ஆகும். 2020-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 0.53 சதவீதமாக உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel