Type Here to Get Search Results !

உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாள் / HIV VACCINE DAY

 

  • உலகளாவிய ஒற்றுமை மற்றும் பொறுப்புகளை பகிர்தல் என்ற மையக்கருத்துடன் உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாள் 2021 இன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி இன்றளவும் மனித சமூகத்தை அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றாக இருந்து வருகிறது. தவறான பாலியல் உறவு அல்லது பாதுகாப்பற்ற உடலுறவால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எய்ட்ஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் மற்றும் அவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, கத்தி வழியாகவும், பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கும் பரவுகிறது.
  • இந்த நோயில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கான மருந்துவகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துதற்கும், கூடுதல் உபாதைகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன. 
  • வருமுன் காப்பது மற்றும் போதிய விழிப்புணர்வு இருந்தால் எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்படாது. காற்றில் பரவக்கூடிய வைரஸ் இல்லை என்பது கூடுதல் தகவல்.
எய்ட்ஸ் உலக தடுப்பூசி நாள்
  • ஆண்டுதோறும் மே 18ம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து எய்ட்ஸ் நோய் தடுப்பூசி மற்றும் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். 
  • பாதுகாப்பான உடலுறவின் அவசியம், ஆணுறை பயன்பாடு ஆகியவை குறித்தும், மருத்துவமனைகளில் ஊசிகளை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 
  • இந்தியாவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் (National Institute of Allergy and Infectious Diseases) அமைப்பு மூலம் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
வரலாறு
  • உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாள், அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆற்றிய உரையின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது. 
  • 1997ம் ஆண்டு மோர்கன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் (Morgan State University) பேசிய அவர், எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லியை அழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 
  • அறிவியல் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தடுப்பூசி கண்டுபிடித்து எய்ட்ஸ் நோயை முற்றாக ஒழிக்க வேண்டும், அதற்காக தடுப்பூசியை உருவாக்க வேண்டும் என்று கிளிண்டன் தெரிவித்தார். 
  • அவரின் இந்த உரை எய்ட்ஸ் நோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டியதன் அவசியத்தையும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியது.
மையக்கருத்து
  • மே 18ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நாளில் ஆண்டுதோறும் ஒரு மையக்கருத்தை அடிப்படையாகக்கொண்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். 
  • இந்த ஆண்டு, 'உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்தல்' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel