Type Here to Get Search Results !

TNPSC 18th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கூகுள் நியூஸ் ஷோகேஸ் இந்தியாவில் அறிமுகம்

  • கூகுள் நிறுவனம், இந்தியாவில் 'கூகுள் நியூஸ், டிஸ்கவர்' வலைதளப் பிரிவுகளில், 'நியூஸ் ஷோகேஸ்' என்ற செய்திப் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இதில், சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும் அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என, கூகுள் தெரிவித்துள்ளது. 
  • கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளங்களில் உள்ள நியூஸ் ஷோகேஸ் பகுதியில், ஜெர்மனி, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 700 செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகள் இடம் பெறுகின்றன. இதற்காக, இந்நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. 
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 549 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றம்
  • தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் இந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரியாக நியமித்து, கோரிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். 
  • அதன்படி, முதற்கட்டமாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 549 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுவை பிரித்த 12 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், பெறப்பட்ட மனுக்களில் 0.14% அளவுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • சென்னை தலைமை செயலகத்தில், மனுக்கள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆணையை 14 நபர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.
டெல்லியில் கொரோனாவால் மரணமடைந்த குடும்பத்திற்கு ரூ.50000 நிவாரண நிதி - கெஜ்ரிவால்
  • டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
  • டெல்லியில் இதுவரை 22,111 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
  • மேலும் வீட்டில் வருமானம் ஈட்டுபவர் கொரோனாவால் இறந்தால் மாதம் 2500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
  • கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை டெல்லி அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel