- இந்தியாவில் அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள் வரிசையில், இதுவரை, இரண்டாவது இடத்தில் இருந்த மொரீஷியஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்துள்ளது, அமெரிக்கா.
- தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக, முதலிடத்தை சிங்கப்பூர் வகித்து வருகிறது. சிங்கப்பூரிலிருந்து கடந்த நிதியாண்டில் மட்டும், 1.27 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்டு உள்ளது.
- அமெரிக்காவிலிருந்து கடந்த நிதியாண்டில், 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. மொரீஷியஸ் நாட்டிலிருந்து, 41 ஆயிரத்து, 172 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.
- இவற்றை அடுத்து, ஐக்கிய அரபு நாடுகள், கேமேன் தீவுகள், நெதர்லாந்து, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் பெறப்பட்டு உள்ளன.
- அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும், அன்னிய நேரடி முதலீடு, 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
- நடப்பு நிதியாண்டிலும் அன்னிய நேரடி முதலீடு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.