நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,289 கோடி டாலராக அதிகரித்து சாதனை
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 287 கோடி டாலா் (ரூ.21,000 கோடி) அதிகரித்து 59,289 கோடி டாலரை எட்டியது. இது, முன்னெப்போதும் இல்லாத சாதனை உச்சமாகும்.
- இதற்கு முன்பு, 2021 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,018 கோடி டாலரை எட்டியதுதான் சாதனை அளவாக கருதப்பட்டு வந்தது.
மாநில தோதல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமனம்
- தமிழ்நாடு மாநில தோதல் ஆணையராக வெ.பழனிக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், சனிக்கிழமை வெளியிட்டாா்.
- அவா் மாநிலத் தோதல் ஆணையாளராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து இரண்டாண்டு காலத்துக்கு அந்தப் பதவியை வகிப்பாா் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு குடியுரிமை மத்திய அரசு அறிவிப்பு
- கடந்த 2018ல், டில்லி, குஜராத், ராஜஸ்தான், உ.பி., மஹாராஷ்டிரா, ம.பி., சத்தீஸ்கர் ஆகிய ஏழு மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் அன்னியர், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது.
- குடியுரிமை சட்டத்தின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதே சட்டத்தின் கீழ், தற்போது ஆப்கன், பாக்., வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும், முஸ்லிம் அல்லாத ஹிந்து, சீக்கியர், ஜைனர், புத்த மதத்தினர், இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
- பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அன்னியர்கள், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவிப்பு
- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் வைப்பு தொகை தொடங்கப்படும். இது அவர்களுக்கு மாதாந்திர தனிப்பட்ட தேவைகளை கவனித்து கொள்வதற்கான மாதாந்திர நிதி உதவியை வழங்க பயன்படும். 18 வயதாகும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகை பெறுவதற்கு இது பயன்படும்.
- கொரோனா நோய் தொற்றின் காரணமாக 2 பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளும் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இந்த டெபாசிட் தொகையை பெறுவார்கள்.
- 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும். தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கட்டணங்கள் செலுத்தபப்டும்.
- மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் பலியாகும் பட்சத்தில், இஎஸ்ஐ பென்சன் திட்டத்தின் கீழ் தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் பென்ஷனாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் காப்பீடு பலன் தொகை 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பலனும் அவர்களின் குடும்பத்திற்கு தரப்படும்.
தடுப்பூசி, மருந்துக்கு வரி விலக்கு 8 பேர் கொண்ட குழு அமைப்பு
- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால், தடுப்பூசி, மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிபிஇ கிட், சானிடைசர் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி வரியும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12% வரியும் விதிக்கப்படுகிறது.
- இதை ரத்து செய்ய வேண்டுமென நேற்று முன்தினம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
- இது தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்தார். இதன்படி, 8 பேர் கொண்ட குழுவை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
- 'மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவில் உறுப்பினர்களாக குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், கோவா போக்குவரத்துறை அமைச்சர் மவுவின் கொடிங்கோ, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தெலங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ், உ.பி. நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வரும் ஜூன் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்