ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ணா எழுதிய 'ஒடிசா இதிகாசம்' நூலின் இந்தி பதிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 'உத்கல் கேசரி' ஹரேகிருஷ்ணா மஹதாப், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் 1946 முதல்1950 வரை மற்றும் 1956 முதல் 1961வரையில் ஒடிசா முதல்வராக பதவி வகித்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் ஆவார்.
- இவர் எழுதிய ஒடிசா இதிகாசம் என்ற நூல் இதுவரை, ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் இதன் இந்தி மொழி பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
- இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிஜு ஜனதா தளம் எம்.பி.யும் ஹரேகிருஷ்ணாவின் மகனுமான பர்த்ருஹரி மஹதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்தோஷ்குமார் நியமனம்
- சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்தோஷ்குமார் நியமிக்கப்படுகிறார். பதவி ஏற்றது முதல் 3 ஆண்டுகள் துணைவேந்தர் பொறுப்பில் இருப்பார்.
- கற்றல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் சந்தோஷ்குமார். தமிழக அரசின் சட்டக்கல்வி இயக்குனராக 7 ஆண்டுகள் பணியாற்றிய போது, 7 புதிய சட்டக்கல்லூரிகள் மற்றும் 11 முதுகலை சட்டப்படிப்புகள் உருவாக காரணமாக இருந்தவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தீல் இண்டர்நேசனல் ரேஞ்சர் விருது 2021
- ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில் வனச்சரக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சதீஸ். இங்கு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
- இவர் அங்கு கடல் அடைகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அழிந்துவரும் சித்தாமைகளை பாதுகாக்கும் பணிகள்சிறப்பாக செய்து வந்தார்.
- இந்நிலையில் சதீஸின் சேவையைப் பாராட்டி இவருக்கு சுவிட்சர்லாந்தீல் இண்டர்நேசனல் ரேஞ்சர் விருது கிடைத்துள்ளது. மேலும் ரூ.7.25 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
காவேரிப்பட்டணம் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
- கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் காவேரிப்பட்டணம் அடுத்த தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர்.
- அதில், கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்று குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தட்டக்கல் மலைகளின் நடுவே சுனை அருகே பெருமுறைப்பற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளித்து சுனை ஒன்றையும் செப்பனிட்டு, இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக, உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது.
- இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன் கோவிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.
- பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த இக்கல்வெட்டில் தான் இப்பெருமுகை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது.
- இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால் ஒரு பூவின் மொட்டுபோல் இருப்பதைக் காணலாம். அருகில் உள்ள பெரியமலையும் மொட்டு போலவே தோற்றமளிக்கிறது.
- முகை என்பது மொட்டைக் குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளைக் கொண்ட காரணத்தால் இப்பகுதியானது பெருமுகை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அதியான்களைப் போன்று மலையமான்களும் சங்க காலத்திலிருந்து ஆண்டு வந்த குறுநில மன்னராவார்கள். இவர்கள் திருக்கோவிலூர் பகுதியை ஆண்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
- ராசராசனின் தாயான வானவன் மாதேவியும் மலையமான் குலத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் பல்லவரையர் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர்.
- இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பல்லவரையனான மலையன் மான்வேலி என்ற ஊரின் தலைவனாவான். ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் உதப்பியூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது.
- தொற்றிலிருந்து விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்தது இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தினால் மாதங்களுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
- கார்னிவாக்-கோவ்” (Carnivac-Cov) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி 2020 அக்டோபர் மாதத்திலிருந்து நாய்கள், பூனைகள், நரி இனங்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு சோதனை முறையில் செலுத்தி சோதிக்கப்பட்டது
- மனிதர்களிடையே பரவி வரும் கரோனா தீநுண்மி, விலங்குகளின் உடல்களில் புகுந்து உருமாற்றம் பெற்று வீரியமடைவதைத் தடுக்க, கார்னிவாக்-கோவ் போன்ற விலங்குகளுக்கான தடுப்பூசிகள் உதவும்
- மற்ற சட்டங்களில் உள்ள விதிகளுக்கு ஏற்ப காப்புரிமை விதிகளிலும் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் சூழலில், காப்புரிமை விதிகளின் அமலாக்கத்தில் எந்தவித இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- காப்புரிமை பெற்ற இதழ்களை வெளியிடுவதற்கான விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட இதழ்களை அரசாணையில் வெளியிடுவதற்கான அவசியம் நீக்கப்பட்டுள்ளது.
- ராயல்டி செலுத்தும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராயல்டி தொகையை வசூலிப்பதிலும் விநியோகிப்பதிலும் இணையவழி பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கான அவகாசம் 180 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்புரிமை கோரும் விண்ணப்பங்களை மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.
- தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
- கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
- எனவே, அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
- இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
- வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்டது தொடர்பான அனுபவம் கிரிஜா வைத்தியநாதனுக்கு இல்லை, சட்டப்படி தேவைப்படும் தகுதியையும் அவர் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர்.
- பின்னர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
- இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டில் மின்னணு முறையில் (டிஜிட்டல்) பணப் பரிமாற்றம் 71.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஏசிஐ வேர்ல்ட்வைட் (ACI Worldwide) நிறுவனம் தெரிவித்துள்ளது
- மின்னணு முறையில் உடனடியாக பணப் பரிமாற்றம் செய்வது இப்போது இந்தியாவில் 15.6 சதவீதமாக உள்ளது. 2020-ஆம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவில்தான் அதிக மதிப்புக்கு மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது
- 2020ஆம் ஆண்டில் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சீனா, தென்கொரியா, தாய்லாந்து, பிரிட்டன் ஆகியவை உள்ளன.