கீழடி அகழாய்வில் கருப்பு, சிவப்பு மண் கிண்ணம்
- திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் முதல் நடந்து வருகிறது. கீழடியில் 9 குழிகளுக்கு அளவீடு செய்து குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
- இதில் முதல் குழியில் பாசிமணிகள், பானை ஓடுகள், பனைகள், தட்டுகள், மண்ணாலான கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன. முதல் குழியில் மண் தட்டும், 2-வது குழியில் கருப்பு, சிவப்பு நிறத்தால் ஆன மண் கிண்ணமும் நேற்று கிடைத்துள்ளன.
மல்யுத்தம் அன்ஷு, சோனம் ஒலிம்பிக்கிற்கு தகுதி
- கஜகஸ்தானில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஷு மாலிக், சோனம் மாலிக் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
- இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவா்கள் இருவரும் தகுதிபெற்றனா். ஏற்கெனவே வினேஷ் போகாட் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் எண்ணிக்கை தற்போது 3-ஆக அதிகரித்துள்ளது.
அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை
- அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட "அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை 2021க்கு National Policy for Rare Diseases 2021) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்
- அரிய வகை நோய் குறித்த உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த தேசிய கொள்கை இந்த கொள்கையில் குரூப்-1-இன்கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் நோயால் கொண்டுவரப்பட்டிருக்கிறது
- பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு "ராஷ்டிரீய ஆரோக்ய நிதி திட்டத்தின்” கீழ் ரூ.20 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்படும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினர் மட்டுமின்றி, “பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜ்னா” திட்டத்தின் கீழ் தகுதி பெறுபவர்களில் 40 சதவீதம் பேரும் இந்த மருத்துவ நிதியுதவித் திட்டத்தால் பயன்பெற முடியும்
மகாராஷ்டிர பூஷண் விருது
- 2020 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷண் விருதுக்கு” பாடகி ஆஷா போஸ்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதானது மகாராஷ்டிரா அரசின் மிக உயர்ந்த கௌரவ விருதாகும் அம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது கடந்த 1996-ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசால் நிறுவப்பட்டது
மியாமி ஓபன் டென்னிஸ் 2021
- பிரபல டென்னிஸ் தொடரான மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட் ரீஸ்குவை தோற்கடித்து சாம்பியன் பட்டித்தை வென்றுள்ளார்
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா கூட்டு கடற்படை பயிற்சி
- இந்தியா உள்பட ”க்வாட் (Quadrilateral Security Dialogue) அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் பிரான்ஸுடன் இணைந்து கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவிலான 3 நாள் கூட்டு கடற்படை பயிற்சியை ஏப்ரல் 05-ஆம் தேதி தொடங்கின
- இந்த நாடுகளிடையே கிழக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது
- பிரான்ஸ் சார்பில் நடத்தப்படும் "லா பெரௌஸ்” ('La Perouse' - Multilateral French Maritime Exercise) என்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையின் தாக்குதல் கப்பல்கள் சத்புரா (INS Satpura), கில்டன் (INS Kilian), ஆகியவற்றுடன் நீண்டதூர கண்காணிப்பு விமானம் தாங்கி போர் கப்பலான பி-8ஐ (PAI Long Range Maritime Patrol Aircraft) கப்பலும் பங்கேற்கிறது
- இந்த கூட்டுப் பயிற்சியில் வான் வழித் தாக்குதல் மற்றும் வான் வழி தாக்குதல் எதிர்ப்பு பயிற்சி, தரை வழி தாக்குதல் எதிர்ப்பு பயிற்சி, ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வீரர்கள் பறந்து செல்லுதல் உள்ளிட்ட மேம்பட்ட மற்றும் சிக்கலான கடற்படை பயிற்சிகள் இடம்பெறும்
- சுதந்திரமானதாகவும் இந்தோ-பசிபிக் அனைவருக்குமானதாகவும் அடிப்படையிலான பிராந்தியத்தை மாற்றுவது சர்வதேச சட்டங்களின் நடைமுறைகளை அப்பகுதியில் உறுதிப்படுத்துவது ஆகியவையே இந்த கூட்டுப் பயிற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும்
- கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து "க்வாட்” என்ற அமைப்பின்கீழ் ஒன்றுபட்டு இயங்கி வருகின்றன.