Type Here to Get Search Results !

TNPSC 4th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 22வது வெற்றி ஆஸி. மகளிர் அணி உலக சாதனை

  • பே ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச நியூசிலாந்து 48.5 ஓவரில் 212 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை லாரன் டவுன் 90 ரன், கேப்டன் ஏமி சாட்டர்த்வெய்ட் 32, அமேலியா கேர் 33 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. தரப்பில் மேகான் ஷுட் 4, நிகோலா கேரி 3 விக்கெட் கைப்பற்றினர்.
  • அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 38.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி 65 ரன் விளாசினார்.
  • எல்லிஸ் பெர்ரி 56 ரன், ஆஷ்லி கார்ட்னர் 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேகான் ஷுட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 22வது வெற்றியை வசப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது. முன்னதாக, ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றதே உலக சாதனையாக இருந்தது.

தேசிய மகளிர் ஒருநாள் போட்டி 12வது முறையாக ரயில்வேஸ் சாம்பியன்

  • சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ரயில்வேஸ் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் 167 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திராணி ராய் அதிகபட்சமாக 49 ரன் விளாசினார். 
  • துர்கா முர்மு 31, நிஹாரிகா 39* ரன் எடுத்தனர். ரயில்வேஸ் பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 3, மேஹனா சிங், ஏக்தா பிஷ்ட் தலா 2, ஸ்வாகதிகா, பூனம் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணி 37 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து எளிதாக வென்றது.
  • மேஹனா 53 ரன், பூனம் ராவுத் 59, மோனா 19*, ஸ்நேஹ் ராணா 34* ரன் எடுத்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ரயில்வேஸ் அணி 12வது முறையாக தேசிய சீனியர் மகளிர் ஒருநாள் டிராபியை முத்தமிட்டது. 
  • இந்த தொடர் மொத்தம் 14 முறை நடந்துள்ளதில், ரயில்வேஸ் 2 முறை மட்டுமே பட்டம் வெல்லத் தவறியது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இந்திய அணியில் இளவேனில், மானு பாக்கர்
  • டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்கயிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
  • இந்நிலையில் இந்தாண்டு நடக்கவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வீரர்களை தேசிய ரைபிள் கூட்டமைப்பு இன்று அறிவித்தது. இதில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளவேனில் வாலறிவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • மேலும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 14 ரிசர்வ் துப்பாக்கி சுடுதல் வீரர்களையும் இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அசத்தி வரும் இளவேனில் வாலறிவன் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் மற்றும் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார். 
  • திவ்யான்ஸ் சிங் பண்வாருடன் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இளவேனில் வாலறிவன். அஞ்சும் இடத்தை ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் இளவேனில்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel