Type Here to Get Search Results !

TNPSC 8th & 9th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
  • உலகின் சிறந்த முதல் 20 பெண்மணிகள் விருதை தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.
  • சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்ததுடன் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு விருது அறிவித்திருந்தது. இதற்கான விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது. 
மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர் தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
  • மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய விரரான விஷால் காளிரமணா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
  • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, மங்கோலியாவின் துல்கா துமூர் ஓச்சிரை எதிர்த்து மோதினார்.
  • இதில் 0-2 என பின்தங்கியிருந்த பஜ்ரங் ஆட்டம் முடிவடைய 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அபாரமாக செயல்பட்டு 2-2 என ஆட்டத்தை முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • இந்தத் தொடரில் பஜ்ரங் கடந்த முறையும் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா 14 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் பஜ்ரங் புனியா 2-வது இடத்தில் இருந்தார்.
  • 70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விஷால் காளிரமணா வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் சிர்பாஸ் தல்கட்டை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். 
  • அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான நர்ஷிங் பஞ்சம் யாதவ் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டானியார் கைசனோவிடம் தோல்வியடைந்தார்.
  • மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடரை இந்தியா 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று நிறைவு செய்தது. ஏற்கெனவே மகளிர் பிரிவில் வினேஷ் போகத் தங்கப் பதக்கமும், சரிதா மோர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தனர். 
  • ஆடவர் பிரிவில் நீரஜ், குல்தீப் மாலிக், நவீன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தனர்.
பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை
  • பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் பார்வையிட்டுள்ளார். 
  • அடுத்த 12 மாதத்தில் இந்த 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு இந்த தொழிற்சாலை நிறுவப்பட உள்ளது. இந்த முயற்சி கைகூடினால் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக கார்களை உருவாக்கவும் ஓலா திட்டமிட்டு வருகிறதாம்.
  • இந்த திட்டம் கைகூடினால் உலகில் விற்பனையாகும் இ-ஸ்கூட்டர்களில் 15 சதவிகிதம் இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி
  • இந்திய அளவில் சிறந்த 12 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்) இடம்பெற்றுள்ளது. 
  • மேலும், QS அமைப்பின் உலகின் சிறந்த 450 பல்கலைக்கழகங்களுக்குள் விஐடி பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தின் 7 பாடப்பிரிவுகள் QS அமைப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
  • இதில் 4 பாடப்பிரிவுகள் Computer Science and Information Systems. Electrical and Electronics Engineering, Mechanical Engineering மற்றும் Chemistry பாடப்பிரிவுகள் QS அமைப்பு பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும் 50 இடங்களுக்கு மேல் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதில் விஐடியின் Computer Science and Information Systems, Electrical and Electronics Engineering பாடப்பிரிவுகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
311 வாரங்களுக்கு நம்பர் ஒன் ரோஜர் பெடரரின் சாதனையை தகர்த்த ஜோகோவிச்
  • டென்னிஸ் விளையாட்டு உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் செர்பியாவின் ஜோகோவிச். ATP டூர் டென்னிஸ் ரேங்கிங்கில் 311 வாரங்களுக்கு நம்பர் ஒன் வீரராக இருந்ததன் மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • இதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 310 வாரங்கள் வரை சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து நம்பர் ஒன் வீரராக இருந்துள்ளார். தற்போது அதை சாதனையை தகர்த்துள்ளார் ஜோகோவிச்.
  • ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், விம்பிள்டன் சம்பியன்ஷிப்பை 5 முறையும், அமெரிக்க ஓபனை 3 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச்.
  • கடந்த 2011 ஜூலையில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல்முறையாக முதலிடம் பிடித்திருந்தார் ஜோகோவிச்.
இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
  • வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 
  • 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 
  • இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் அஸ்வின் ஐசிசி தேர்வு
  • இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருந்தார். சென்னையில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 106 ரன்கள் விளாசி, அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த அஸ்வின், அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின் போது 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனையும் நிகழ்த்தியிருந்தார்.
  • பிப்ரவரி மாதம் மட்டும் அஸ்வின் 24 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தத் தொடரில் அவர், ஒட்டுமொத்தமாக 32 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அஸ்வினின் உயர்மட்ட செயல் திறனானது இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றவும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் உதவியாக இருந்தது.
  • பிப்ரவரி மாதத்தில் மட்டும் அஸ்வின் பேட்டிங்கில் 176 ரன்கள் சேர்த்ததுடன் 24 விக்கெட்களையும் கைப்பற்றியதால் சிறந்த வீரராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
'இஸ்ரோ' தயாரிப்பில் அதி நவீன 'ரேடார்'
  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, 'எஸ்.ஏ.ஆர்., ரேடார்' சாதனத்தை தயாரித்துள்ளது.
  • இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசாவுடன் இணைந்து, முதன் முறையாக, 'நிசார்' என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த உள்ளது. 
  • இதில், முதன் முறையாக, வெவ்வேறு அலைவரிசை திறன் உள்ள, 'எல் பேண்டு மற்றும் எஸ் பேண்டு' ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.
  • இத்திட்டத்தில், செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான, ராக்கெட், எஸ் பேண்டு எஸ்.ஏ.ஆர். ரேடார் ஆகியவற்றை, இஸ்ரோ வழங்கும்.அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கான, எல் பேண்டு எஸ்.ஏ.ஆர் ரேடார், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., ரிசீவர் ஆகியவற்றை, நாசா தயாரித்து அளிக்கும்.
  • இந்நிலையில், இஸ்ரோ தயாரித்த, எஸ்.ஏ.ஆர்., ரேடாரை, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • இதில், இஸ்ரோ தலைவர், கே. சிவன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, கொடியசைத்து, ரேடார் சாதனத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். 
  • இந்த ரேடார் சாதனத்தை, நாசா, அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் வாயிலாக, நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel