Type Here to Get Search Results !

TNPSC 10th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதர்களாக 3 வயது குழந்தைகள் இருவர் தேர்வு

  • பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கடந்தஆண்டு நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்த 3 வயது பெண் குழந்தைகள் இருவர் குழந்தைகள் நல விழிப்புணர்வுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது காஞ்சிபுரத்தில் எம்.எஸ்.ரித்திகா, கே.எஸ்.வைணவி என்ற 3 வயது குழந்தைகள் இருவர், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வுக்காக காஞ்சிபுரம் ராயன் குட்டைத் தெருவில் இருந்து நான்கு ராஜவீதிகளையும் சுமார் 3 கி.மீ. சுற்றி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேலூரைச் சேர்ந்த 'திபிரிட்ஜ்' என்ற தனியார் அறக்கட்டளை செய்திருந்தது.
  • இவர்களின் சாதனை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ், மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம் பெற்றன. இதன் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதர்கள் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

  • டெல்லியின் தேசிய தலைநகர எல்லைப்பகுதி சட்டத்தின் (சிறப்புப் பிரிவு) 2-வது திருத்த மசோதா 2021-ஐ மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் தாக்கல் செய்தார். 
  • இந்த மசோதா கடந்த மாதம் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று இது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
  • பின்னர் மசோதா மீதான விவாதத் துக்கு அமைச்சர் பதிலளித்துப் பேசினார். அவர் பேசும்போது, 'டெல்லி யின் மக்கள்தொகை 2011 கணக் கெடுப்புப்படி 1.6 கோடியாக உள்ளது. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும்போது டெல்லி மக்கள்தொகை 2 கோடி யைத் தொட வாய்ப்புள்ளது.
  • டெல்லி மற்றும் அதன் எல்லையைச் சுற்றி அமைந்துள்ள அங்கீகாரமற்ற காலனிகள், குடியிருப்புகளை முறைப்படுத்த இந்த மசோதா வகை செய்கிறது.
  • அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் பணியை ஏற் கெனவே இருந்த மத்திய அரசுகள் செய்யத் தவறிவிட்டன. எனவே நாங்கள் இந்தத் திட்டத்தை மிகவும் தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு பணியாற்றினோம்.
  • தேசியத் தலைநகரில் அங்கீகாரமற்ற காலனி, குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டம் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 
  • அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தற்போது இந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம். 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை பொதுமக்கள் முறைப்படுத்திக் கொள்ள முடியும்.

நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க சீனா ரஷியா ஒப்பந்தம்

  • 'நிலவு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சா்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க சீனாவும் ரஷியாவும் திட்டமிட்டுள்ளன. இது தொடா்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது.
  • நிலவின் மேற்பரப்பிலோ சுற்றுவட்டப் பாதையிலோ இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. நிலவு சாா்ந்த அனைத்து ஆய்வுகளையும் இங்கு மேற்கொள்ள முடியும்.
  • மற்ற நாடுகளும் இந்த ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பது குறித்த ஆலோசனை, கட்டுமானம் உள்ளிட்டவற்றில் சீனாவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படும். விண்வெளியை அமைதி சாா்ந்த விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எனினும், நிலவு ஆராய்ச்சி நிலையம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்களை சீனா வெளியிடவில்லை.
  • இரு சிறிய ரக விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை சீனா ஏற்கெனவே விண்வெளிக்குச் செலுத்தி பரிசோதித்து வருகிறது. நிலவின் இருள்சூழ்ந்த பகுதியில் ஆய்வுக்கலனை சீனா நிலைநிறுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலனைத் தரையிறக்குவதற்கான முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.
  • இத்தகைய சூழலில், விண்வெளி சாா்ந்த திட்டத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு சீனாவும் ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஏழு இந்திய பெண்களுக்கு அமெரிக்க விருது

  • அமெரிக்காவில், நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு, சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
  • இதில், நியூயார்க்கில் உள்ள, இந்திய துணை துாதர், ரந்திர் ஜெய்சால் பங்கேற்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சாதனை பெண்கள் ஏழு பேருக்கு, நினைவு கேடயம், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
  • இந்த வகையில், வதேதராவைச் சேர்ந்த, நவரசனா கல்விக் கழக தலைவரும், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் துாதருமான, தேஜல் அமின் விருது பெற்றார்.
  • ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையில், டாக்டராக உள்ள, உமா ராணி மதுசூதனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, சிறப்பான சேவை வழங்கியதற்காக பாராட்டப்பட்டார். 
  • செவிலியர், ராஷ்மி அகர்வால், பல் டாக்டர், அபா ஜெய்ஸ்வால், சட்ட ஆலோசகர், சபீனா தில்லான், நடிகையும், தயாரிப்பாளருமான, ராஷனா ஷா ஆகியோருக்கும், விருது வழங்கப்பட்டது.
  • குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு, உணவு உள்ளிட்ட உதவிகளையும், இலவச முக கவசங்களையும் வழங்கிய, 'மாஸ்க் ஸ்குவாட்' என்ற, மகளிர் அமைப்பை பாராட்டி, கேடயம் வழங்கப்பட்டது.

கட்டுமான செலவு பற்றி ஜே.எல்.எல்., இந்தியா' நிறுவனத்தின் ஆய்வறிக்கை
  • இந்தியாவில் உள்ள, பெரு நகரங்களில், கட்டுமானத்துக்காக ஆகும் சராசரி செலவை ஒப்பிடும்போது, மும்பையில், 10 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 
  • அதே சமயம், சென்னை மற்றும் ஐதராபாதில், கட்டுமான செலவு, மும்பையை விட, 14 சதவீதம் குறைவாக இருக்கிறது.
  • மும்பையில், மிக உயரமான, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான, சராசரி கட்டுமான செலவு, ஒரு சதுர அடிக்கு, 5,625 ரூபாய் ஆகிறது.இதுவே, வர்த்தக கட்டடங்களுக்கான செலவு, 1 சதுர அடிக்கு, சராசரியாக, 3,875 ரூபாய் ஆகிறது.
  • கட்டுமான செலவுகள் அதிகரித்திருப்பதற்கு, கட்டுமான பொருட்களின் தேவை அதிகரித்திருப்பதும், அவற்றின் வினியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகளுமே முக்கிய காரணங்களாக உள்ளன. வினியோக பிரச்னைகள் சரியான பின், விலை, இயல்புக்கு திரும்பும் என, எதிர்பார்க்கலாம். 
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை 
  • 3வது இந்திய கிராண்ட்ப்ரீ (Indian Grand Prix-3) தடகளப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.07 மீ. தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 
  • இதற்கு முன்னர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் 88.06 மீ. தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது.

இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி
  • இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சியை (The India Toy Fair 2021) காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்துள்ளார் இந்த கண்காட்சியானது பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 02-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 
  • 85 சதவீத பொம்மைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்திய பொம்மை சந்தையை உலகமயமாக்கவும் தயாரிப்பை தற்சார்பு உடையதாக்கவும் 15 அமைச்சகங்களைக் கொண்ட "தேசிய பொம்மை திட்டத்தை ” (National Toy Action Plan) மத்திய அரசு உருவாக்கியுள்ளது
  • பொம்மை சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்தியாவின் விளையாட்டு பொம்மைகளை பிரபலப்படுத்தவும் "டாய்கத்தான்-2121” (Toycathon-2021) என்ற கண்காட்சி நடத்தப்படவுள்ளது

செய்திகள் ஒரு வரிகளில்

  • உலகின் முதல் பிளாட்டிபஸ் (வாத்தலகி) சரணாலயம் (World's first Platypus sanctuary) ஆஸ்திரேலிய நாட்டில் வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் அமைக்கப்படவுள்ளது. 
  • பிளாட்டிபஸ் என்பது பருவநிலை காரணமாக அழிந்து வரும் ஒரு பாலூட்டி உயிரினம் ஆகும். 
  • Chakra IAS academy 2021-ல் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் (Khelo India University Games 2021) இரண்டாம் பதிப்பு (2nd Edition) கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ளது.
  • இந்திய கடற்படைக்காக “VL-SRSAM” (THE VERTICAL Launch-Short Range Surface to Air Missile) என்ற ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • கர்நாடகா மாநிலத்தின் தோட்டக்கலை துறையானது விற்கப்படாத பூக்களை பல்வேறு பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்காக "மலர் பதப்படுத்தும் மையம் (Flower Processing Centre) அமைக்கவுள்ளது
  • ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்ற "அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டியின்” மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் பெலின்டா பென்சிக்சை வீழ்த்தி, போலந்தின் இகா ஸ்வியாடெக்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 
  • பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் தினம் (National Science Day). 2021-ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் கருத்துரு “Future of Science and Technology and Innovation : Impacts on Education, Skills and Work"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel