Type Here to Get Search Results !

சிறுவர் வன்கொடுமை / CHILD ABUSE

  • சிறு பிள்ளைகளை வன்கொடுமைக்கு உள்ளாகும் அந்த நிகழ்வு குறித்த தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிறது. சிறுவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் 90% சிறுவர்கள் ஏதோ ஒரு வழியில் குற்றவாளியை அடையாளம் கண்டு கொள்கின்றனர். 
  • 68% சிறுவர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே வன்கொடுமை செய்கின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வன்கொடுமை சம்பவங்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது. குழந்தையின் உடல்நலம் மற்றும் அவர்களது நல்வாழ்வில் இது நீண்டகால உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
  • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் குறித்து முழுமையாக புரிந்துகொள்ளமுடியாத நிலையில் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதபோது அவர்களை அந்த செயலில் ஈடுபடுத்துவது ஆகும். 
  • ஒரு குழந்தை இயல்பாகவே பாலியல் செயல்பாட்டைப் பற்றி அறியப்படாதவர்களாக கருதப்படுகின்றனர். மேலும் இந்தச் செயலுக்கு அவர்கள் வளர்ச்சியடையாத நிலையில், அவர்களால் அந்த தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடிவதில்லை.
POCSO என்றால் என்ன?
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் தான் போக்ஸோ. கடந்த 2012-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பலவிதமான பாலியல் குற்றங்களை பட்டியலிடுவதன் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை நிவர்த்தி செய்வதைக் இந்த சட்டம் குறிக்கிறது.
POCSO சட்டத்தின் கீழ் வரும் குழந்தையின் வயது வரம்பு என்ன?
  • 18 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு குழந்தையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக புகார் கொடுக்கலாம். இது இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அதிகபட்ச வயதாக கருதப்படுகிறது.
POCSO வழக்கை எப்போது தாக்கல் செய்ய முடியும்?
  • POCSO இன் கீழ் எந்தவொரு குற்றச்செயலும் செய்யப்பட்டுள்ளது என்ற அச்சம் அல்லது அறிவுள்ள எந்தவொரு நபரும் அத்தகைய குற்றத்திற்கு எதிராக புகாரளிக்கலாம்.
POCSO வழக்கை யார் தாக்கல் செய்யலாம்?
  • பாதிப்பட்ட சிறுவர் அல்லது சிறுமியின் பெற்றோர், மருத்துவர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோர் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
POCSO வழக்கு தாக்கல் செய்வதற்கான நடைமுறை என்ன?
  • இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படக்கூடும் என்ற அச்சம் உள்ள எந்தவொரு நபரும் இந்த தகவலை சிறப்பு சிறார் போலீஸ் பிரிவு அல்லது உள்ளூர் காவல்துறையில் உடனடி மற்றும் பொருத்தமான ஆதாரங்களுடன் வழங்க வேண்டும்.
துஷ்பிரயோகம் குறித்து புகாரளிக்க கால வரம்பு உள்ளதா?
  • சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தைப் புகாரளிப்பதற்கான எந்தவொரு கால வரம்பையும் POCSO சட்டம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர், எந்த வயதிலும், அவர் அல்லது அவள் ஒரு குழந்தையாக இருந்தபோது எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் குறித்து புகார் செய்யலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel