இந்தியா உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி
- இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வென்றிருந்தது.
- மற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று இந்த தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
- இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அங்கு நடந்த 2வது டெஸ்டில் 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
- அகமதாபாத்தில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் வென்று காட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அசத்தியிருந்தனர்.
- இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் மற்றும் அக்சர் என இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கும் கூடுதலாக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. வரும் ஜுன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறவுள்ளது.
- செவ்வாய் கிரக மேற்பரப்பில் பொசிவரன்ஸ் ஆய்வுக் கலம் சோதனை முறையில் முதல்முறையாக செலுத்திப்பட்டது. 33 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்ட அந்த ஆய்வுக் கலம், சுமாா் 6.5 மீட்டா் தொலைவுக்கு நகா்த்திப் பாா்க்கப்பட்டது. முதலில் முன்பக்கமாக 4 மீட்டா் தொலைவுக்கு நகா்த்தப்பட்ட பொசிவரன்ஸ், பிறகு இடதுபுறமாக 150 டிகிரி கோணத்துக்குத் திருப்பப்பட்டது.
- அதன்பிறகு 2.5 மீட்டா் தொலைவுக்குப் பின்புறமாக அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டு, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பொசிவரன்சின் நகரும் திறன், அதில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய பொசிவரன்ஸ் ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.
- வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் 'ஜெஸெரோ' பள்ளப்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
- அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.