- ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஐநா. சூழல் திட்டம், கெனியாவின் தலைநகரான நைரோபியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
- ஐநா. சூழல் திட்டம், உணவு கழிவுகளை குறைக்க அரசுகளுடன் இணைந்து செயல்படும் வ்ராப் (WRAP) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட, உணவு கழிவு குறியீடு 2019 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- உணவு கழிவுகள் பணக்கார, ஏழை நாடுகளில் பரவலாக ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது. 2019ம் ஆண்டில் 93.1 கோடி டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது.
- இதனைக் கொண்டு உலகில் உள்ள மக்களுக்கு 7 முறை உணவு அளித்திருக்கலாம். இதில், 61 சதவீதம் வீடுகள், 26 சதவீதம் ஓட்டல்கள், உணவு விடுதிகள், 13 சதவீதம் இதர சில்லறை வழிகளில் இருந்தும் வீணாக்கப்படுகிறது.
- உலகளவில் தயாரிக்கப்படும் உணவு உற்பத்தியில் 17 சதவீதம் வீணாகிறது. மேலும், சாப்பிட தயாராக இருக்கும் உணவுகளில் 11 சதவீதம் வீடுகள், 5 சதவீதம் ஓட்டல்கள், 2 சதவீதம் சில்லறை வழிகளிலும் வீணாக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும், உலக தனிநபர் வருவாயில் 121 கிலோ, வீட்டு தனிநபர் வருவாய் கணக்கில் 74 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது.
- இந்தியாவை பொருத்தவரையில், ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ உணவு பொருட்களை வீண் செய்கின்றனர். இது, அமெரிக்காவில் 59 கிலோ, சீனாவில் 64 கிலோவாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 6 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 163 கிலோ உணவுகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.